குழந்தையுடன் பெண் சாவு - கணவன்-மாமியார் கைது
நாகர்கோவில்: கைக்குழந்தையுடன், பெண் கொல்லப்பட்ட கொடுமையான சம்பவத்தில் அவருடைய கணவர் மற்றும் மாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
இரணியல் அருகே உள்ள ஆளுர் தோப்புவிளையை சேர்ந்தவர் கதிரேசன். ஓர்க்ஷாப் தொழிலாளி. இவரது மனைவி தேவிகா. இவர்களுக்கு 3 மாதத்தில் ஒரு கைக்குழந்தை உள்ளது. 2 நாட்களுக்கு முன்பு தேவிகாவும், கைக்குழந்தையும் தீயில் கருகி இறந்தனர்.
இதுகுறித்து இரணியல் போலீசார் சந்தேக சாவு வழக்கு பதிவு செய்தனர். தேவிகாவை வரதட்சனை கேட்டு கொடுமைபடுத்தியதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறினர்.
மேலும் கணவர் குடும்பத்தினர் மீது கொலை வழக்கு பதியும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கிடையே தேவிகாவின் சாவு தொடர்பாக ஆர்டிஓ தேவதாஸ் விசாரணை நடத்தினார். இந்த விசாரணை அறிக்கை நேற்று காலை இரணியல் போலீசாரிடம் ஓப்படைக்கப்பட்டது.
அதில் வரதட்சனை கொடுமையால் தேவிகா இறந்ததாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து போலீசார் சந்தேக சாவாக இருந்த இந்த வழக்கை வரதட்சணை கொடுமை செய்து பெண்ணை இறக்க செய்தல் (இபிகோ 304-பி) என்ற பிரிவுக்கு மாற்றினார்கள். கொலை வழக்குக்கு என்ன தண்டனை கிடைக்குமோ அந்த தண்டனை இந்த பிரிவுக்கும் கிடைக்கும்.
மேலும் ஆர்டிஓ அறிக்கையில், தேவிகாவின் சாவுக்கு அவரது கணவரும், மாமியாரும் முக்கிய காரணம் என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து தேவிகாவின் கணவர் கதிரேசன் மற்றும் அவரது அம்மா இன்று கைது செய்யப்பட்டனர்
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications