சென்னையை தகர்க்க திட்டமிட்டோம்-லஷ்கர் ஒப்புதல்
பெங்களூர்: கடந்த 2008ல் பெங்களூரில் தொடர் குண்டு வெடிப்பு நடத்திய சமயத்தில் சென்னையிலும் தாக்குதல் நடத்தி திட்டமிட்டிருந்தோம். ஆனால், கடைசி சமயத்தில் அது மாற்றப்பட்டுவிட்டது என போலீஸ் விசாரணையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவன் தெரிவித்துள்ளான்.
கடந்த 2008ல் பெங்களூரில் நடந்த தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக போலீசார் சர்பரஷ் நவாஸ் என்ற தீவிரவாதியை கைது செய்துள்ளனர்.
லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த அவனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தாங்கள் சென்னையை தகர்க்க திட்டமிட்டோம். ஆனால் கடைசி நேரத்தில் திட்டம் மாற்றப்பட்ட பெங்களூரில் மட்டும் குண்டு வைக்க முடிவு செய்யப்பட்டது என அவன் தெரிவித்துள்ளான்.
சர்பரஷ் நவாசும், முகாஜிதின் அமைப்பை சேர்ந்த உம்மர் ஹாஜி என்ற கேரளாவை சேர்ந்த நபரும் சென்னை மற்றும் பெங்களூரில் குண்டு வைப்பது தொடர்பாக வங்கதேசம் சென்று திரும்பி அங்கு இருக்கும் லஷ்கர் இயக்க தலைவர்களை சந்தித்து திட்டங்களுடன் வந்துள்ளனர்.
ஆனால், கடைசி நேரத்தில் சென்னையில் குண்டு வைக்க வேண்டாம். அந்த திட்டத்தை ஒத்திவைத்துவிடுமாறு வளைகுடா பகுதிக்கான லஷ்கர்-இ-தொய்பா தலைவர் வாலி என்ற ரீகன் என்ற ஷமீம் தெரிவித்துள்ளார். பெங்களூரில் மட்டும் தொடர் குண்டு வெடிப்பை நடத்த உத்தரவிட்டு்ள்ளார்.
ஒரே சமயத்தில் இரண்டு ஊர்களில் தாக்குதல் நடத்துவதற்கு அதிக அளவில் ஆள்பலம் தேவை என்பதாலும், ஒரு வேளை தோல்வியில் முடிந்தால் மிகப்பெரும் நஷ்டம் ஏற்படும் என்பதாலும் இரண்டு நகரங்களிலும தாக்குதல் நடத்துவதை ஒத்தி வைத்ததாக தெரிகிறது.
மேலும், பெங்களூர் தான் தற்போது இந்தியாவின் முக்கிய நகரம். தகவல் தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அங்கு குண்டு வைத்தால் உலகத்தின் கவனத்தை நம் பகக்ம் கொண்டு வரலாம் என ஷமீம் சர்பரஸிடம் கூறியுள்ளான்.
சென்னையில் இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடு செய்யப்பட்ட உம்மர் ஹாஜியிடம் இது குறித்து எடுத்து கூறி அவரை சமாதானம் செய்து, குண்டுவெடிப்பை ஒத்திப்போடும் பொறுப்பையும் ஷமீம், சர்பரஸிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த தாக்குதலுக்கு தேவையான ரூ. 2 லட்சத்தையும் ஷமீம் தான் கொடுத்துள்ளான்.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
அலப்பறைக்கு ரெடியான RCB ரசிகர்கள்.. பெங்களூரில் மேம்பாலங்களை மூடும் போலீசார்.. பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications