அர்ஜூன் சிங், சிவராஜ் பாட்டீலுக்கு ஆளுனர் பதவி
டெல்லி: முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், அர்ஜூன் சிங் உள்ளிட்டோருக்கு விரைவில் ஆளுனர் பதவி அளிக்கப்படும் என தெரிகிறது.
புதுச்சேரி ஆளுனராக இருந்த கோவிந்தி சிங் குர்ஜார் கடந்த ஏப்ரம் மாதம் காலமானார். இதையடுத்து தற்போது தமிழக ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா அவரது பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார். கடந்த மாதம் 25ம் தேதி அசாம் மாநில ஆளுனர் மாத்தூர் மரணமடைந்தார்.
அதே நேரத்தில் உத்தர பிரதேச ஆளுனர் டிவி ராஜேஸ்வர், குஜராத் ஆளுனர் நவல் கிஷோர் குமார், ஹரியானாவி்ன் ஏஆர் கித்வால் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூலையில் முடிக்கிறது. கோவா ஆளுனர் எஸ்எஸ் சித்து வரும் ஆகஸ்ட் 5ல் ஓய்வு பெறுகிறார்.
இதை தவிர்த்து தற்போது திரிபுரா மற்றும் அசாமிலும் ஆளுனர் பதவிகள் காலியாக இருக்கின்றன. இந்த ஏழு இடங்களுக்கும் புதிய ஆளுனர்களை நியமிக்க மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இவர்களில் உள்துறை அமைச்சராக இருந்து மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக பதவியை ராஜினாமா செய்த சிவராஜ் பாட்டீலுக்கு வாய்ப்பு உறுதியாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
தற்போது 73 வயதான சிவராஜ் பாட்டீல் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினராக கடந்த 2004ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு ஜூலையுடன் முடிவடைகிறது. இவரை தவிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் அர்ஜூன் சிங்கிற்கும் ஆளுனராகும் வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களை தொடர்ந்து மேலும் சில காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு யோகம் அடிக்கும் என கூறப்படுகிறது. ஆனால், யார் எந்த மாநிலத்துக்கு நியமிக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications