பொன்னமராவதியில் பாம்பு கடித்து தாய்-மகள் பலி
பொன்னமராவதி: பொன்னரமாவதியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தாய் மற்றும் மகள் ஆகியோர் பாம்பு கடிக்கு பலியானார்கள். இதை பார்த்த பாட்டி ஒருவர் அதிர்ச்சியில் மரணமடைந்தார். இந்த சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதிக்கு அருகே செம்பூதி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ராஜகுமாரி என்ற பெண் தனது மகள் பசுரூதீன் என்ற பாரதி (35) மற்றும் பேத்தி கீர்த்தனா (12) உள்ளிட்டோருடன் வசித்து வந்தார்.
இவர்களது வீடு இருக்கும் பகுதியில் தோட்டங்களும், செடி கொடிகளும், இடிந்து போன மண்குடிசைகள் இருந்துள்ளது. அதே நேரத்தில் இப்பகுதியில் அடிக்கடி பாம்பு நடமாட்டமும் இருந்து வந்துள்ளது. கிராமப் பகுதிகளில் இதெல்லாம் சகஜம் என்பதால் யாரும் அதை பெரிதாக எடுத்துகொள்ளவில்லை.
இந்நிலையில் நேற்று ராஜகுமாரி குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இரவு சாப்பாட்டை முடித்துவிட்டு நன்கு தூங்கி கொண்டிருந்தனர்.
அதிகாலை சுமார் மூன்று மணி அளவில் கீர்த்தனாவின் காலில் எதுவே கடித்துள்ளது. அந்த சிறுமி என்னவென்று எழுந்து பார்ப்பதற்குள் மீண்டும் ஒரு முறை கடித்துள்ளது. இதில் அந்த சிறுமி அந்த இடத்திலே நுரை பொங்க மயங்கி சரிந்தார்.
தன் மகள் வாயில் நுரை தள்ளி மயக்கி கிடப்பதை அறியாமல் அருகில் படுத்திருந்த பாரதி தன்னை எதோ கடிப்பதை உணர்ந்து கூச்சலிட்டார். இதையடுத்து சற்று தள்ளி படுத்திருந்த பாட்டி ராஜகுமாரி விளக்குகளை போட்டார். அப்போது அங்கு ஒரு சாரை பாம்பு படம் எடுத்து ஆடி கொண்டிருந்தது. அவர்கள் இருவரையும் அந்த பாம்பு தான் கடிந்தது என்பது தெரியவந்தது.
இதற்கிடையில் பாரதியும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயக்கமடைந்தார். தன் மகள் மற்றும் பேத்தி இருவரும் நுரை தள்ளி கிடப்பதை பார்த்த அதிர்ச்சியில் பாட்டி ராஜகுமார் அலறியபடி மயங்கி விழுந்தார்.
அவரது அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்து வீடுகளில் தூங்கி கொண்டிருந்தவர்கள் பதறியடித்து ஓடி வந்தனர். சாரை பாம்பை அடித்து கொன்ற அவர்கள் மயங்கி கிடந்த மூவரையும் மருத்துவமனைக்கு தூக்கி சென்றுனர். அங்கு அவர்கள் மூவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து பொன்னமராவதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications