விருத்தாசலத்தில் சொந்த செலவில் குடிநீர்-விஜய்காந்த்
Subscribe to Oneindia Tamil
விருதாச்சலம்: விருதாச்சலம் தொகுதியில் உள்ள கிராமப்புற பகுதிகளில் வரும் 5ம் தேதி முதல் லாரிகள் மூலம் சொந்த செலவில் குடிநீர் வினியோகம் செய்யப் போவதாக அந்தத் தொகுதியின் எம்எல்ஏவும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களாக விருதாச்சலம் தொகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டு வரும் விஜய்காந்த் நேற்று தலித் காலனி பகுதியில் ஒருவரது வீட்டில் மனைவியோடு உணவருந்தினார்.
குறை கேட்கச் சென்ற விஜயகாந்த்திடம் பல கிராமங்களிலும் மக்கள் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவது குறித்துக் குறிப்பிட்டனர்.
இதையடுத்து வரும் 5ம் தேதி முதல் தன்னுடைய சொந்த செலவில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று விஜயகாந்த் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications