விஷமப் பேச்சு-கர்நாடக பாஜக எம்.எல்.ஏ. கைது
தாவணகரே: லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆளும் பாஜகவைச் சேர்ந்த எம்.எல்.ஏ ரேணுகாச்சாரியா இன்று கைது செய்யப்பட்டார்.
கர்நாடக மாநிலம் ஹொன்னாலி தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரேணுகாச்சாரியா. ஹட்டி தங்கச் சுரங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் பேசியதாக இவர் மீது தாவணகரே போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தற்போது ரேணுகாச்சாரியா கைது செய்யப்பட்டுள்ளார். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
முன்னதாக முன்ஜாமீன் கோரி ரேணுகாச்சாரியா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். ஆனால் அந்த மனுவை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து ரேணுகாச்சாரியாவை போலீஸார் கைது செய்தனர்.
முன்ஜாமீன் மனு மீதான விசாரணையின்போது ரேணுகாச்சாரியாவை கைது செய்யாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக போலீஸாரை கடுமையாக விமர்சித்தது உயர்நீதிமன்றம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications