உதவித் தொகை-அரசு டாக்டர்கள் போராட்டம்
சென்னை: பிற டாக்டர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பட்ட மேற்படிப்பு பயிலும் டாக்டர்களுக்கும் கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி அரசு டாக்டர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். கருப்பு பேட்ஜ் அணிந்து அவர்கள் போராட்டம் நடத்தினர்.
சென்னை, கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பட்ட மேற்படிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
மேற்படிப்பு மேற்கொள்ளும் டாக்டர்களுக்கு அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது.
தற்போது 6-வது ஊதியக்குழு பரிந்துரையின்படி அரசு ஊழியர்கள், டாக்டர்களுக்கு கூடுதல் சம்பளம் கிடைக்கவுள்ளது.
இந்த நிலையில், பட்ட மேற்படிப்பு பயிலும் டாக்டர்களும் தங்களுக்கான கல்வி உதவி தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரி தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சென்னையில் உள்ள எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகளில் மேற் படிப்பு மேற்கொள்ளும் தனியார் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.
சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 300 டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பயிற்சியில் ஈடுபட்டனர். இதேபோல அனைத்து மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளிலும் மேற்படிப்பு டாக்டர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.
நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது. நாளை காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை எந்தவிதப் பயிற்சியிலும் ஈடுபடாமல் உண்ணாவிரதம் இருக்கத் திட்டமிட்டுள்ளனர்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications