எம்பிபிஎஸ்-ரேங்க் பட்டியலில் அதிக அளவில் பிற்பட்ட மாணவர்கள்
சென்னை: எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் பொதுப் பிரிவில் சேர முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 மாணவர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,483 எம்பிபிஎஸ் இடங்களில் பொதுப் பிரிவினருக்கு 460 இடங்களும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 393 இடங்களும் உள்ளன.
இந்த ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவு மாணவர்கள் சேருவதற்கான கட்-ஆப் மதிப்பெண் 197.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான கட்-ஆப் 196.25 ஆக இருக்கும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டு எம்பிபிஎஸ், பல் மருத்துவம் ஆகியவற்றில் சேர மொத்தம் 14,321 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதில் 8,873 பேர் மாணவிகள், 5,064 பேர் மாணவர்கள்.
நிராகரிக்கப்பட்ட 384 விண்ணப்பங்கள் போக, 13,937 விண்ணப்பங்களின் அடிப்படையில் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
வகுப்பு வாரியாக கட்-ஆப் விவரம்:
பொதுப் பிரிவு- 197.75 பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்- 196.25
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லிம்)- 196.25
எம்பிசி எனப்படும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கட்-ஆப் மதிப்பெண் 192.5 ஆக இருக்கும் என்று தெரிகிறது.
கவுன்சலிங்கில் பெருமளவில் மாணவர்கள் கலந்து கொள்ளாவிட்டால் இந்த கட்-ஆப் மதிப்பெண்கள் சிறிய அளவுக்குக் குறையலாம்.
குறைந்த முற்பட்ட மாணவர்கள்:
நேற்று வெளியிடப்பட்ட எம்பிபிஎஸ் ரேங்க் பட்டியலில் பொதுப் பிரிவில் முதலில் இடம் பெறும் 460 இடங்களில், முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த 50 மாணவர்கள் (10.87 சதவீதம்) மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இவர்களது எண்ணிக்கை 54 ஆக இருந்தது.
அதிகரி்த்த பிற்பட்ட மாணவர்கள்:
அதே நேரத்தில் இந்த ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அளவுக்கு ரேங்க் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
நர்சிங் இடங்கள் அதிகரிப்பு
இதற்கிடையே தமிழகத்தில் எம்.எஸ்சி. நர்சிங் படிப்புக்கு இந்த ஆண்டு கூடுதலாக 25 இடங்கள் கிடைத்துள்ளன. அதே போல பார்மசி படிப்பிலும் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications