திருச்செந்தூர் கும்பாபிஷேகம்-சென்னையிலிருந்து சிறப்பு ரயில்கள்
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்படும் 2 சிறப்பு ரயில்கள் திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஜூலை 2ம் தேதி நடக்கிறது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதற்காக தெற்கு ரயில்வேயும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வரை அறிவிக்கப்பட்டிருந்த சிறப்பு ரயில்களில் சில ரயில்கள் தற்போது திருச்செந்தூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் (0655) செவ்வாய்கிழமை (இன்று) மாலை 6.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை காலை 8 மணிக்கு திருச்செந்தூரை சென்று அடையும்.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி வழியாக எழும்பூருக்கு ஜூலை 1ம் தேதி பகல் 12.15 மணிக்கு சிறப்பு ரயில் (0656) புறப்படும். இந்த ரயில் மதியம் 2 மணிக்கு திருநெல்வேலிக்கு வந்து, மறுநாள் காலை 4.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும்.
எழும்பூரில் இருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு ஜூலை 1ம் தேதி இரவு 8.25 மணிக்கு சிறப்பு ரயில் (0659) புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு திருச்செந்தூரை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூரில் இருந்து ஜூலை 2ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு ரயில் (0660) புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு எழும்பூரை வந்தடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications