வட சென்னை இணை ஆணையர் ரவி ஐஜி ஆனார் - 8 டிஐஜிகளுக்கு பதவி உயர்வு
சென்னை: வட சென்னை இணை ஆணையர் ரவி உள்ளிட்ட 8 டிஐஜிகளுக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் மாலதி வெளியிட்டுள்ள அறிக்கை..
ரவி - வட சென்னை இணை ஆணையரான இவர் பதவி உயர்வுடன் சென்னை தலைமையிடத்து கூடுதல் கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
அம்ரேஷ் பூஜாரி - திண்டுக்கல் டிஐஜியான இவர் போலீஸ் பயிற்சிக் கல்லூரி ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
கருணாசாகர் - ஆயுதப்படை டிஐஜியான இவர் திருச்சி கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் நெல்சன் - மண்டபம் டிஐஜியான இவர் அதே இடத்தில் ஐஜியாக பதவி உயர்வுடன் தொடர்வார்.
ஜெயந்த் முரளி - மத்திய தொழில் பாதுகாப்புப் படை பிரிவு டிஐஜியான இவர் அதே இடத்தில் ஐஜியாக தொடருவார்.
குணசீலன் - தென்சென்னை இணை கமிஷனரான இவர் ஐஜி பதவி உயர்வுடன் நெல்லை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
கிருஷ்ணமூர்த்தி - சிபிசிஐடி (குற்றம்) டிஐஜியான இவர் தென் மண்டல ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
மஞ்சுநாதா - நெல்லை கமிஷனராக இருக்கும் இவர் ஊர்க்காவல் படை ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
இவர்கள் தவிர 3 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தென் மண்டல ஐஜி சஞ்சீவ்குமார், தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி டிஐஜி சேஷசாயி வடசென்னை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடி டிஐஜியான வெங்கட்ராமன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்படுகிறார்.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications