மெரீனாவில் குளிக்க-'கடலை போட' தடை!!

அதேபோல கடற்கரையில் உட்கார்ந்து கொண்டு செக்ஸ் சில்மிஷங்களில் ஈடுபடுவது, உம்மா கொடுத்துக் கொள்வது ஆகியவையும் கூடவே கூடாது என்று போலீஸார் கூறியுள்ளனர். பிக்பாக்கெட்களின் அட்டகாசத்தை ஒடுக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அழகிய கூந்தல் போல நீண்டு விரிந்து கிடக்கும் மெரீனா கடற்கரையை மாசுபடுத்தி, பாழ்படுத்திப் பார்ப்பதில் நம்மவர்களை மிஞ்ச வேறு யாராலும் முடியாது.
கையில் கொண்டு வருவதை அப்படியே சாப்பிட்டு விட்டு போட்டு விட்டுப் போவது, கடற்கரையிலேயே காதல் களியாட்டத்தில் ஈடுபடுவது என நாறடித்து வருகிறார்கள்.
இதுபோக ஈவ் டீசிங் தொல்லை, பிக்பாக்கெட்களின் தொல்லை, வழிப்பறி என ஏகப்பட்ட இடையூறுகள் வேறு.
இது போதாதென்று கடலுக்குள் போய் குளித்து சாகசம் செய்யப் போவதாக கூறி பல பேர் உயிரிழந்த பரிதாபமும் அவ்வப்போது நடைபெறுகிறது.
இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் இப்போது போலீஸார் பெரிய புல்ஸ்டாப் வைக்கவுள்ளனர்.
கண்காணிப்பு கோபுரம்...
கடற்கரையில் 4 இடங்களில் உயரமான கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. அதில் நின்று போலீசார் பைனாகுலர் மூலம் கடற்கரைக்கு வந்து செல்வதை கண்காணிப்பார்கள்.
கடலில் அத்து மீறி குளிப்பவர்கள் குறித்த தகவல்களை வயர்லெஸ் மூலம் குதிரை படை போலீசுக்கும், கடற்கரை ரோந்து பணி போலீசுக்கும் தகவல் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பர்.
பிக்பாக்கெட் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஆசாமிகளை அடையாளம் கண்டு தெரிவிப்பார்கள்.
கடற்கரையை பெட்ரூமாக்கி அசிங்கமாக நடந்து கொள்ளும் காதல் ஜோடிகளும் அங்கிருந்து வெளியேற்றப்படுவர்.
தற்போது கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இதேபோல எலியாட்ஸ் பீச்சிலும் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்படுகிறதாம்.
இதுகுறித்து கமிஷனர் ராஜேந்திரன் கூறுகையில்,
பொது மக்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியை ஒட்டி கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications