வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை-பதட்டம் அதிகரிப்பு
சியோல்: வட கொரியா இன்று இரண்டு குறுகிய தொலைவு ஏவுகணைகளை ஏவி பரிசோதித்துள்ளது. இதனால் மீண்டும் பதட்டம் அதிகரித்துள்ளது.
வட கொரியா தற்போது அணு ஆயுத ஏவுகணைகளை அடுத்தடுத்து ஏவி பரிசோதித்து வருகிறது. சமீபத்தில் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ராக்கெட்டையும் அது ஏவிப் பரிசோதித்தது.
வட கொரியாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்து வருகிறது. இருப்பினும் அதை வட கொரியா நிராகரித்து விட்டது.
இதையடுத்து வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா மேலும் இறுக்கியுள்ளது.
இந்த நிலையில் இன்று 2 குறுகிய தொலைவு ஏவுகணைகளை ஏவி வட கொரியா பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணைகள் 100 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியவை.
வட கொரியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து கடலுக்குள் இந்த ஏவுகணைகளை ஏவி வட கொரியா பரிசோதித்துள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே இன்னும் சில நாட்களில் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லக் கூடிய திறன் படைத்த நடுத்தர ரக ஏவுகணைகளை வட கொரியா ஏவவுள்ளதாக தென் கொரிய நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோல இந்த மாதத்திலேயே 1000 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய ரோடாங் ஏவுகணை, 340 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடிய ஸ்கட் ஏவுகணைகளையும் வட கொரியா அடுத்தடுத்து ஏவிப் பார்க்கவுள்ளதாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications