தனியாரிடம் பயணிகள் ரயில் சேவை-சர்வே பரிந்துரை
டெல்லி: பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசு தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில்,
நாட்டில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களில் இருந்தும் தனியார் ரயில்களை இயங்க அனுமதி வழங்கலாம். சுமார் 10க்கும் மேற்பட்ட வழிதடங்களில் இந்த ரயிலை இயக்கலாம். தனியாருக்கு தலா ஒரு ரயில் விதம் ஒதுக்கலாம்.
கடந்தாண்டு இந்திய ரயில்வேக்கு பயணிகள் போக்குவரத்து மூலம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது. முந்தைய ஆண்டை விட பயணிகள் போக்குவரத்து அபார வளர்ச்சி கண்டுள்ளது. 2007-08ல் 5 சதவீதமாக உயர்ந்த பயணிகள் போக்குவரத்து 2008-09ல் 6.9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 697.1 கோடி பயணிகளை சுமந்து சென்றுள்ளது.
அதே நேரத்தில் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி பாதியாக குறைந்துள்ளது. 2007-08ல் 9 சதவீதமாக இருந்த இந்த வளர்ச்சி, 2008-09ல் 4.9 சதவீதமாக குறைந்துள்ளது.
சரக்கு போக்குவரத்தை அதிகரிக்கும் விதமாக ரயில்வே துறையினர் சென்னை-டெல்லி, மும்பை-கொல்கத்தா, காரக்பூர்-விஜயவாடா, சென்னை-கோவா உள்ளிட்ட வழித்தடங்களை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும்.
பயணிகளின் குறைகளை போக்கும் விதமாக ரயில்வே சுமார் 325 ரயில்வே நிலையங்களை நவீனப்படுத்த வேண்டும். 24 முதல் 26 பெட்டிகள் கொண்ட நீளமான பயணிகள் ரயில்களை இயங்குவதற்காக நாடு முழுவதும் உள்ள 502 ரயில் நிலையங்களில் கடந்த மூன்று ஆண்டுகளாக விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன.
விபத்துக்கள் குறைந்துவிட்டன...
ரயில் விபத்துக்களும் இந்த ஆண்டு வெகுவாக குறைந்துள்ளது. பத்து லட்சம் கிமீ., பயணத்தில் எத்தனை விபத்துக்கள் நடக்கிறது என்பதை வைத்து ரயில் பாதுகாப்பு எண் கணக்கிடப்படுகிறது. கடந்த 2001-02 ல் 0.55 இருந்த இந்த ரயில் பாதுகாப்பு எண் தற்போது 0.20 ஆக குறைந்துள்ளது.
அதே நேரத்தில் 2007-08ல் 194 ரயில் விபத்துக்கள் நடந்துள்ளன. அது இந்தாண்டு 177 ஆக குறைந்துள்ளது. நாட்டில் மொத்தமுள்ள 5320 டிக்கெட் மையங்களில் சுமார் 2079ல் முன்பதிவு செய்யாத டிக்கெட்டுகளும் கம்ப்யூட்டர் மூலம் வழங்கப்படுகிறது. 375 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் மையங்கள் செயல்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications