3 மாதமாக பெண்ணை கற்பழித்த 2 போலீஸார் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் ஒரு பெண்ணை மிரட்டிக் கற்பழித்த இரண்டு போலீஸார், 3 மாதங்களாக அந்தப் பெண்ணைச் சீரழித்துள்ளனர். அப்பெண் கொடுத்த புகாரின் பேரில் இப்போது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கம்பா கூடத்தை சேர்ந்தவர் சந்தியா (18). இவரது தாய்மாமன் கிருஷ்ண கிஷோர். சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ண கிஷோர் சந்தியாவை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறினார். பின்னர் சந்தியாவை மயிலாவரம் லாட்ஜூக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்தார்.
அப்போது லாட்ஜில் போலீஸ் ரெய்டு நடந்தது. வெங்கட்ராவ், பிரசாத் ஆகிய இரு போலீஸாரும் ரெய்டு நடத்தினர்.
போலீஸாரைப் பார்த்ததும் கிஷோர் ஓடி விட்டார். சந்தியா சிக்கிக் கொண்டார். தனியாக சிக்கிக் கொண்ட சந்தியாவை அந்த இரு காமுகப் போலீஸாரும் சேர்ந்து நிர்வாண கோலத்தில் செல்போனில் படம் பிடித்துக் கொண்டனர்.
அதன் பின்னர் தங்களது காம இச்சைக்கு உடன்பாடுமாறு வற்புறுத்தினர். இல்லாவிட்டால் நிர்வாணப் படத்தை வெளியில் விட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு உடன்பட்டுள்ளார் சந்தியா. பின்னர் செல்போன் படத்தைக் காட்டிக் காட்டியே கிட்டத்தட்ட 3 மாதங்களாக அந்தப் பெண்ணை சீரழித்துள்ளனர் இரு போலீஸாரும்.
அத்தோடு நின்று விடாமல், தங்களுக்குத் தெரிந்த நண்பர்களையும் அழைத்து வந்தனர். பின்னர் பெரும் பெரும் தொழிலதிபர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சந்தியாவை உடன்பட வைக்க முயன்றனர்.
இதற்கு மேலும் பொறுத்தால் நாசமாகிப் போய் விடுவோம் என பயந்து போன சந்தியா மகளிர் அமைப்பு ஒன்றிடம் புகார் கொடுத்தார். தனியார் டிவிகளிலும் பேட்டி கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து இரு போலீஸாரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கைதும் செய்யப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications