நிர்வாகத்தின் எச்சரிக்கையை புறக்கணித்து ஏர் இந்தியா ஊழியர்கள் 2 மணி நேரம் ஸ்டிரைக்

முன்பே அறிவித்தபடி பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை இந்த ஸ்டிரைக் நடைபெற்றது.
முன்னாக ஊழியர்களுக்கு ஏர் இந்தியா நிர்வாகம் விடுத்த எச்சரிக்கையில், ஸ்டிரைக்கில் ஈடுபடும் ஊழியர்களின் சம்பளத்தைக் குறைக்கப் போவதாக அறிவித்திருந்தது.
இதுகுறித்து ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், விமான நிலையங்களில் பயணிகளுக்கு எந்தவித அசவுகரியமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்படும். இயல்பு நிலை நீடிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
ஆனால் அதைப் புறக்கணித்த ஊழியர்கள் திட்டமிட்டபடி ஸ்டிரைக் செய்தனர்.
டெல்லி, மும்பையில் உள்ள விமான நிலையங்களில் ஊழியர்கள் சரியாக 1 மணிக்கு வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவப்பு நிறக் கொடிகளைக் கையில் ஏந்தி, பழைய விமான நிலையம் முன்பு கூடிய அவர்கள் நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர்.
இதுகுறித்து ஏசிஇயு பொதுச் செயலாளர் கதியான் கூறுகையில், சம்பளச் சட்டப்படி ஊழியர்களின் சம்பளத்தை நிர்வாகம் தாமதப்படுத்த முடியாது. ஜூலை 10ம் தேதிக்குள் சம்பளத்தை தர வேண்டும். ஏர் இந்தியா நிர்வாகம் ஊழியர்களின் நலனைக் கொள்ளாமல் நடந்து கொள்கிறது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் ஆண்டு பட்ஜெட்டே ரூ. 7000 கோடிதான். ஆனால் ரூ. 6000 கோடிக்கு புதிதாக 68 விமானங்களை வாங்க அது திட்டமிட்டுள்ளது. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார்.
மும்பை, சென்னை உள்பட அனைத்து விமான நிலையங்களிலும் ஏர் இந்தியா ஊழியர்கள் ஸ்டிரைக் செய்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications