இந்தியாவில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒருவர் பலி - இதுவரை 120 பேர் பாதிப்பு
டெல்லி/கொச்சி: இந்தியாவில் முதன் முறையாக பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த என்.ஆர்.ஐ ஒருவர் உயிரிழந்துள்ளார். இதுவரை 120 பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது.
இறந்தவரின் பெயர் ஸ்டான்லி பெலிஸ். கேரளாவைச் சேர்ந்தவர். 52 வயதான இவர் 2 வாரங்களுக்கு முன்பு இங்கிலாந்திலிருந்து கொச்சிக்கு வந்தார்.
அங்கிருந்து தனது சொந்த ஊரான கொல்லம் சென்றார். அங்கு வந்தவுடன் அவருக்கு உடல் நலம் பாதிக்க
ப்பட்டது. இதையடுத்து கோட்டயத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருந்த ஹோலி கிராஸ் மருத்துவமனை டாக்டர் ஷைலஜா கூறுகையில், கடும் காய்ச்சல் மற்றும் மூச்சிறைப்பு காரணமாக நேற்று இரவு 7 மணிக்கு பெலிஸ் உயிரிழந்தார் என்றார்.
பன்றிக் காய்ச்சலால் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் இதை உறுதிப்படுத்த அவரது உமிழ் நீர் பரிசோதநைக்காக டெல்லியில் உள்ள தேசிய தொற்று நோய்க் கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனைக்குப் பின்னர்தான் மரணத்திற்கான காரணம் தெரிய வரும். ஒரு வேளை பன்றிக் காய்ச்சலால்தான் இவர் இறந்தார் என்பது உறுதியானால், பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியாவில் பலியான முதல் நபர் இவர்தான்.
இதற்கிடையே, கர்கான், பெங்களூர், புனே, கொச்சி ஆகிய ஊர்களில் மேலும் நான்கு பேருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியிருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களையும் சேர்த்து பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications