பயிற்சி டாக்டர்கள் ஸ்டிரைக்-ஐகோர்ட் இன்று தீர்ப்பு
சென்னை: பயிற்சி டாக்டர்கள், மருத்துவ மேற்படிப்பு டாக்டர்கள் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டு பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள், பட்டமேற்படிப்பு படிக்கும் மருத்துவர்கள், உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு படிக்கும் மருத்துவர்கள் ஊக்கத் தொகை உயர்வு கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து வேலை நிறுத்தம் செய்து வரும் பயிற்சி டாக்டர்களை விடுதியிலிருந்து வெளியேற்ற மருத்துவக் கல்வி இயக்குனரம் உத்தரவு பிறப்பித்தது.
இந் நிலையில் தங்களுக்கு ஊக்கத் தொகை உயர்வு அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் பயிற்சி டாக்டர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகேசன், நீதிபதி வெங்கட்ராமன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச், வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றால் ஊக்கத் தொகை உயர்வு கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு அரசிடம் தெரிவிக்கப்படும் என்றனர்.
இதையடுத்து சங்கப் பிரதிநிதிகளை கலந்து ஆலோசித்து விட்டு, இன்று (வெள்ளிக்கிழமை) தங்களது முடிவைக் கூறுவதாகப் பயிற்சி டாக்டர்கள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் தீர்ப்பும் இன்று அளிக்கப்படும் என்று தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications