ரிலையன்ஸிலிருந்து ரிலையன்ஸ் கேபிடல் வெளியேறியது
மும்பை: முகேஷ் அம்பானியின் நிர்வாகத்தில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறியது அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் கேபிடல் நிறுவனம்.
ரிலையன்ஸ் நிறுவனத்தில் தனக்கு இருந்த ரூ.129.88 கோடி மதிப்புள்ள பங்குகளை முழுமையாக விற்றுவிட்டு வெளியேறியது ரிலையன்ஸ் கேபிடல்.
நாட்டின் வர்த்தகத்தையே நிர்ணயிக்கிற பெரும் நிறுவனங்களில் ஒன்று ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் (RIL). அம்பானிகள் சொத்துக்களைப் பிரித்துக் கொண்ட போதும், நிறுவனங்களில் அவர்களுக்கிருந்த பங்குகள் அப்படியே தொடர்ந்தன.
அதன்படி ரிலையன்ஸ் நிறுவனத்தில், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கேபிடலுக்கு ரூ.129.88 மதிப்புள்ள பங்குகள் இருந்தன. இந்தப் பங்குகள் அனைத்தையும் விற்றுவிட்டு, ரிலையன்ஸிலிருந்து வெளியேறியுள்ளது ரிலையன்ஸ் கேபிடல்.
அதே நேரம் முகேஷ் அம்பானியின் இன்னொரு நிறுவனமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்ப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டில் இன்னும் ஒரு சதவிகிதப் பங்கை வைத்துள்ளது ரிலையன்ஸ் கேபிடல்.
அனில் அம்பானியின் மற்றொரு முக்கிய நிறுவனம் ஆர்என்ஆர்எல். இந்த நிறுவனமும் ரிலையன்ஸில் கணிசமான பங்குகளைக் கொண்டுள்ளது. சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிவாயு விற்பனை தொடர்பாக ஆர்என்ஆர்எல் கோர்ட்டுக்குப் போயிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications