நாளை மத்திய பட்ஜெட்: வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் இருக்கலாம்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை மத்திய பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார். வருமான வரி உச்சவரம்பு உயர்வு உள்ளிட்ட பல்வேறு சலுகைகள் இதில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லோக்சபா தேர்தலில் வென்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில் நேற்று முன்தினம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாளை பொது பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார் பிரணாப் முகர்ஜி.
ரயில்வே பட்ஜெட்டைப் போல இதிலும் மக்களைப் பெரிய அளவில் பாதிக்காமல் பல்வேறு சலுகைகள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாத ஊதியம் பெறுவோர், வருமான வரி உச்சவரம்பு அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர். ரூ. 2.5 லட்சம் வரை இந்த உச்சவரம்பு உயர்த்தப்படக் கூடும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது.
6வது ஊதியக் கமிஷன் பரி்ந்துரைகள் நாடு முழுவதும் கிட்டத்தட்ட அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால் அரசு ஊழியர்களின் ஊதியம் கணிசமாக உயர்ந்துள்ளது. ஆனால் தற்போதைய உச்சவரம்பே தொடர்ந்தால், இந்த ஊதிய உயர்வின் பலன் அரசு ஊழியர்களுக்குக் கிடைக்காமல் போய் விடும். எனவே நிச்சயம் வருமான வரி உச்சரவரம்பு அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல்வேறு வரி சீரமைப்புத் திட்டங்களும் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இதுகுறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வரிகள் ரத்து செய்யப்படலாம். சில வரிகள் குறைக்கப்படலாம்.
புதிய வரி விதிப்புகளால் மக்களுக்குப் பெருமளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications