பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கியது
சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல் பட்டப்படிப்புக்கான கவுன்சிலிங் இன்று காலை தொடங்கியது. இன்று விளையாட்டு வீரர்களுக்கான இடங்கள் நிரப்பப்பட்டன.
இன்று தொடங்கி ஜூலை 29ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. இதற்கு 1.32 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 354 கல்லூரிகளைச் சேர்ந்த அரசு ஒதுக்கீட்டின் கீழ் வரும் 85 ஆயிரம் மாணவர் இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படவுள்ளன.
முதல் கட்ட கலந்தாய்வில், 60 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
இன்று காலை கவுன்சிலிங் தொடங்கியது. முதல் நாளான இன்று விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் நடந்தது.
இதில் முதல் 10 இடங்களை பிடித்த பொன்கிருத்திகா, அன்னிஷாரெட்டி, உத்ரா, அக்னீஸ்வர், ஹரிதா ஓம்பிரகாஷ், பிரதீப்குமார், ஆனந்த், அர்ச்சனா, ஷங்கர் ஆகியோருக்கு துணைவேந்தர் மன்னர் ஜவஹர் சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீட்டின் கீழ் 3327 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். அவர்களில் தரவரிசை அடிப்படையில் 332 பேர் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மொத்தம் 100 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் 12 இடங்களும் மற்றும் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 88 இடங்களும் உள்ளன.
நாளை முதல் 3 நாட்கள் தொழில்நுட்ப பிரிவினருக்கான கவுன்சிலிங் நடக்கிறது. 9-ந்தேதி ஊனமுற்றோருக்கான கவுன்சிலிங் நடக்கிறது. 10-ந்தேதி முதல் பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங் தொடங்குகிறது.
தினமும் 3500 பேர் வீதம் கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முதல்கட்ட கவுன்சிலிங் வருகிற 29-ந் தேதி வரை நடக்கிறது. கட்-ஆப் மார்க் 161 வரை பெற்றவர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications