நீதிபதிக்கு மிரட்டல் விவகாரம் - ராஜாவிடம் விளக்கம் கேட்டுள்ளார் கருணாநிதி

சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிப்பெண் திருத்தல் மோசடி விவகாரத்தில் சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள பெரம்பலூரைச் சேர்ந்த டாக்டர் கிருஷ்ணமூர்த்தி அவரது மகன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என தன்னை மத்திய அமைச்சர் ஒருவர் மிரட்டும் வகையில் கூறியதாக நீதிபதி ரகுபதி பரபரப்புத் தகவலைத் தெரிவித்தார்.
இதையடுத்து யார் அந்த அமைச்சர் என்ற கேள்வி எழுந்தது. அமைச்சர் யார் என்பதைக் கண்டுபிடித்து அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பிரச்சினை எழுப்பின.
இந்த நிலையில் ராஜாதான் அந்த அமைச்சர் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அதிரடியாக தெரிவித்தார். அவரை உடனடியாக பிரதமர் மன்மோகன் சிங் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்றும் கோரினார்.
ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுக்களை அமைச்சர் ராஜா மறுத்துள்ளார்.
இந்த நிலையில், இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. ஆனால் அதற்குப் பதிலளித்த சட்ட அமைச்சர் துரைமுருகன், யார் அவர் என்பதை நீதிபதிதான் சொல்ல வேண்டும். அவரே சொல்லாதபோது யார் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.
இந்த விவகாரம் குறித்து இதுவரை முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இதுவரை வெளிப்படையாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் அமைச்சர் ராஜாவிடம் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளிக்குமாறு கூறியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. திமுகவின் நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதையே இது காட்டுவதாக அரசியல் அரங்கில் பேச்சு அடிபடுகிறது.
யார் இந்த கிருஷ்ணமூர்த்தி..?
கிருஷ்ணமூர்த்தி குறித்து ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிடுகையில், கிருஷ்ணமூர்த்தி பெரம்பலூரைச் சேர்ந்தவர். அங்கு ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். அவரது தொழிலில் அமைச்சர் ராஜாவுக்கு 15 சதவீத பங்கு உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications