புதிய அணை: கேரள திட்டம் பலிக்காது-துரைமுருகன்
உத்தமபாளையம்: பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம் பலிக்காது என்று தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் ரூ 5.50 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாக அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
விழாவில் கலந்து கொண்ட தமிழக பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டும் கேரள அரசின் திட்டம் பலிக்காது. பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க மத்திய நீர்வள கமிஷன் மற்றும் நிபுணர்களின் அறிக்கையையும், கோர்ட் தீர்ப்பையும், கேரள அரசு ஏற்க மறுத்துள்ளது. அது மட்டுமின்றி அணையின் பாதுகாப்பு குறித்த அறிக்கையினையும் ஏற்க மறுத்துள்ளது.
தற்போது மீண்டும் அதே தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில் கேரள அரசு புதிய அணை கட்டப்போவதாக அறிவித்துள்ளது.
ஒரு சிறு வாய்க்கால் கட்டுவதற்கே ஆயிரம் விஷயங்களை கடந்து செய்ய வேண்டி உள்ளது. அப்படி இருக்கும் போது புதிதாக அணை கட்டுவது என்பது முற்றிலும் நடக்காத விஷயம். இது குறித்து பொது மக்கள் பயப்பட தேவையில்லை.
மக்களுக்காகவே சட்டம். ஆட்சியும் அவர்களுக்காகவே. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் சட்டம் மற்றும் நீதித் துறையை அணுக வேண்டும்.
நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்குவது வருத்தம் அளிக்கிறது. நீதித்துறையினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். வழக்குகளை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications