தண்டவாளத்தில் விரிசல்-தப்பியது முத்துநகர் எக்ஸ்பிரஸ்
விருதுநகர்: விருதுநகர் அருகே ரயில் தண்டவாளத்தி்ல ஏற்பட்ட விரிசல் உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டு சரி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த சமயத்தில் அப்பகுதி வழியாக செல்லவிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
விருதுநகர் அருகே அல்லம்பட்டியில் நேற்று அதிகாலையில் ரயில் தண்டவாளத்தில் திடீர் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த ரயில்வே பராமரிப்பாளர்கள் உயர் அதிகாரிக்களுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு தொழில்நுட்ப ஊழியர்களுடன் வந்து விரிசலை அடைத்தனர். இந்நிலையில் சென்னையில் இருந்து தூத்துக்குடி நோக்கி முத்துநகர் எக்ஸ்பிரஸ் நேற்று அதிகாலை சுமார் 5 மணிக்கு வந்து கொண்டிருந்த முத்துநகர் எக்ஸ்பிரஸ் இந்த விரிசல் காரணமாக விருதுநகர் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
தண்டவாள விரிசல் சரிசெய்யப்பட்ட பின்னர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் சற்று தாமதமாக தூத்துக்குடி நோக்கி புறப்பட்டு சென்றது. சரியான நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications