ஆஹா..ஓஹோ.. காங்.-ம்ஹூம்.. பாஜக!
டெல்லி: பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்துள்ள பட்ஜெட் அருமையானது என்று காங்கிரஸ் கூறியுள்ளது. ஆனால் பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே இல்லை என்று பாஜக வர்ணித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறுகையில், குறுகிய கால உதவி நிதித் திட்டங்கள், நீண்ட கால சீர்திருத்தங்கள் என பல்வேறு வகையான கலவைகளுடன் கூடிய அருமையான பட்ஜெட் இது.
பொருளாதார சீர்குலைவு பெரிய அளவில் உள்ள இந்த சூழ்நிலையில் நிதியமைச்சர் அறிவித்துள்ள திட்டங்கள் மிகவம் சிறப்பானவை, பாராட்டுக்குரியவை. மக்கள் மீது வரிச் சுமை திணிக்கப்படாதது பாராட்டுக்குரியது என்றார் அவர்.
பிறகு ஏன் பங்குச் சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டது என்ற கேள்விக்கு திவாரி பதிலளிக்கையில், பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது பங்குச் சந்தையை மட்டும் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்றார் திவாரி.
ஒன்றுமே இல்லாத பட்ஜெட் - பாஜக
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், இந்த பட்ஜெட்டில் எந்த விசேஷ செய்தியும் இரு்பபதாக எனக்குத் தெரியவில்லை.
எந்தவிதத்திலும் கவராத, உப்புச் சப்பில்லாத பட்ஜெட் இது என்றார்.
சமாஜ்வாடி எதிர்ப்பு..
காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் சமாஜ்வாடிக் கட்சி பட்ஜெட்டில் எந்தவித முக்கிய அம்சமும் இல்லை. இது யாரையும் கவராத பட்ஜெட் என்று வர்ணித்துள்ளது.
அக்கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறுகையில், ரயில்வே பட்ஜெட் இனிப்பும், கசப்பும் கலந்ததாக இருந்தது. ஆனால் இந்த பட்ஜெட் முழுக்க முழுக்க கசப்பாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
விவசாயிகள், ஊரகப் பகுதிகள் இந்தப் பட்ஜெட்டில் முழுமையாக புறக்கணிப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
லாலு பாராட்டு..
ரயில்வே பட்ஜெட்டை கடுமையாக விமர்சித்த லாலு பிரசாத் யாதவ், பிரணாப் தாக்கல் செய்த பொது பட்ஜெட் அனைத்துத் தரப்பினரின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பாலன்ஸ்டாக உள்ளதாக கூறியுள்ளார்.
மதச்சார்பற்ற ஜனதாதளம், இடதுசாரிகள், பிஜூ ஜனதாதளம் ஆகியவை பட்ஜெட்டை விமர்சித்துள்ளன.
சவால்களை சந்திக்க மறந்த பட்ஜெட் - சிபிஐ
சிபிஐ மூத்த தலைவர் குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், பொருளாதார சவால்களை சந்திக்கக் கூடிய வகையிலான நடவடிக்கைள் பட்ஜெட்டில் குறிப்பிடப்படவில்லை.
அடிப்படைக் கட்டமைப்பு, மின்சாரம், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் விவசாயம் ஆகியவற்றுக்கு நிதியமைச்சர் அறிவித்துள்ள ஒதுக்கீடுகள் போதுமானதாக இல்லை.
அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்படும் நிதியுதவிகளுக்கு முழு வரி விலக்கு என அறிவித்திருப்பது காங்கிரஸ் பாஜகவுக்கு மட்டுமே பயன்படும். தொழில் நிறுவனங்கள், எங்களுக்குப் பணம் கொடுக்கப் போவதில்லை. பாஜக, காங்கிரஸுக்குத்தான் அவை பணத்தை வாரியிறைக்கும். எனவே அவர்களுக்குத்தான் இது பலன் தரும் என்றார் அவர்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு












Click it and Unblock the Notifications