அச்சுதானந்தன், விஜயன் மீது நடவடிக்கை இல்லை - சிபிஎம்
டெல்லி: கேரள் முதல்வர் அச்சுதானந்தன் மற்றும் கேரள மாநில சிபிஎம் செயலாளர் பினரயி விஜயன் ஆகியோர் மீது பொலிட் பீரோ கூட்டத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டு நாள் பொலிட்பீரோ கூட்டம் நேற்று முன்தினம் டெல்லியில் துவங்கியது. இந்த கூட்டத்தில் கேரள மார்க்சிஸ்ட் கட்சியில் நிலவும் பிரச்சனை, லாவலீன் ஊழல் குறித்தும் முதல் நாள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இரு துருவங்களான அச்சுதானந்தன் மற்றும் பினரயி விஜயன் ஆகியோர் தொடர்ந்து கோஷ்டி அரசியலில் ஈடுபட்டு வருவதால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
கட்சிப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் அளித்திருந்த பேட்டியில், இப் பிரச்சனைக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும். இதனால் கேரளாவில் கட்சியின் நிலைமை பரிதாபமாகிவிட்டது என்று கூறியிருந்தார். இதனால் இருவர் மீதும் கடும் நடவடிக்கை பாயும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அது குறித்த முடிவை கட்சி பொலிட்பீரோ தள்ளிப் போட்டு விட்டது. இதனால் இருவரது தலையும் தற்போதைக்குத் தப்பியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications