'டுபாக்கூர்'...எம்பிபிஎஸ் இட ஒதுக்கீட்டில் 'செபக் தக்ரா'!
சென்னை: விளையாட்டு வீரர்களுக்கான எம்பிபிஎஸ் இட ஒதுக்கீட்டின் கீழ் யாருமே கேள்விப்படாத 'செபக் தக்ரா' என்ற ஒரு விளையாட்டுப் பிரிவின் கீழ் இரு மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன
'செபக் தக்ரா' என்று ஒரு விளையாட்டாம். இதை யாருமே கேள்விப்படாத நிலையில் அந்த விளையாட்டு வீரர் கார்த்திக், வீராங்கனை அபிநயா ஆகியோருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
செபக் தக்ரா உள்பட பிரபலமில்லாத பல விளையாட்டுகளும், செஸ், கேரம் உள்ளிட்ட உடல் உழைப்பு இல்லாத சில விளையாட்டுகள் பொறியியல் படிப்புககான இட ஒதுக்கீட்டிலும் அதிக இடங்களைப் பிடித்துள்ளதாகத் தெரிகிறது.
தட களம், ஹாக்கி, கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் ஓரிருவர் மட்டுமே அரசு சாரா பொறியியல் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். ஆனால் இந்த விளையாட்டுகளைச் சேர்ந்த எவருக்கும் அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று தெரிகிறது.
இதன்மூலம் ஹாக்கி, கூடைப்பந்து, வாலிபால், தடகளம் போன்ற விளையாட்டுகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவிகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதும் இட ஒதுக்கீடு முறைகேடாக பயன்படுத்தப்படுதும் தெளிவாகிறது.
அதாவது எம்பிபிஎஸ், பிஇ போன்ற இடங்களைப் பிடிப்பதற்காக யாருமே கேள்விப்பட்டிராத விளையாட்டுகளில் தேசிய, மாநில, உலக சாம்பியன் என்று ஏதாவது ஒகு சான்றிதழைக் காட்டி இடங்கள் பிடிப்பது அதிகமாகி வருகிறது.
விரைவில் 'சொட்டங்கல்', 'கொலகொலயா முந்திரிக்கா', 'கிட்டி புள்ள' போன்ற விளையாட்டுகளைக் காட்டி சீட் கேட்டாலும் ஆச்சரியமில்லை.
இந் நிலையில் இதை எதிர்த்து தமிழக விளையாட்டு சங்கம் ஒன்று, நீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்க திட்டமிட்டுள்ளதாம்.
தொழில்பிரிவு மாணவர்களுக்கு இன்று முதல் கவுன்சிலி்ங்:
இதற்கிடையே பி.இ. படிப்பி்ல் சேர பிளஸ் டூ தொழில்பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் இன்று சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தொடங்குகிறது. புதன்கிழமை வரை நடக்கும் இந்த கவுன்சிலிங்கில் பிளஸ் டூ தொழில்பிரிவு மாணவர்களுக்கு 3,422 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிளஸ் டூவில் தொழிற்பிரிவு பயின்ற 4,860 மாணவர்கள், 210 மாணவிகள் என 5,070 பேர் கவுன்சலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மொத்தமுள்ள 3,422 இடங்களில் முற்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டவர்களை உள்ளடக்கிய பொதுப் பிரிவில் 1061 இடங்களும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 907 இடங்களும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 684 இடங்களும், தாழ்த்தப்பட்டோர் பிரிவில் 513 இடங்களும், அருந்ததியினர் உள்ஒதுக்கீட்டில் 103 இடங்களும், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவினருக்கு 120 இடங்களும், பழங்குடியினர் பிரிவில் 34 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
விளையாட்டு வீரர்களுக்கான பிஇ இடங்கள் ஒதுக்கீட்டிலும் செபக் தக்ரா போல அறிமுகமே இல்லாத சில விளையாட்டுகளே பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications