துரோகிகள் களை எடுக்கப்படுவர்-ஜெயலலிதா

அதிமுக தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகள் அபிராமிக்கு பொள்ளாச்சியில் இன்று திருமணம் நடந்தது.
கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வில் இருக்கும் ஜெயலலிதா, ஹெலிகாப்டர் மூலம் பொள்ளாச்சி வந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
பின்னர் அவர் பேசுகையில்,
அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதற்காக நாம் வாக்காளர்களை குறை கூறக்கூடாது.
அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என பொது மக்கள் விரும்பினார்கள். ஆனால் பண பலத்துடனும், படை பலத்துடனும் இருக்கும் தி.மு.க. பெற்ற வெற்றி பெரிய வெற்றி ஆகாது. அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் இடையே 15 லட்சம் ஓட்டுகள் தான் வித்தியாசம்.
தி.மு.க. இந்த பாராளுமன்ற தேர்தலில் 1500 கோடி செலவு செய்துள்ளது. போலீசாரும், அரசு அதிகாரிகளும் திமு.க. வுக்கு உறுதுணையாக இருந்தனர். இந்த அதிகாரம் இருந்தும் வெறும் 15 லட்சம் வாக்குகளே நமக்கு குறைவாக கிடைத்துள்ளது.
இந்த 15 லட்சம் மட்டுமின்றி அதற்கு மேலும் நாம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால் நமது கழகத்தில் உள்ள சிலர் எதிரிகளிடம் விலை போய் விட்டனர். அவ்வாறு விலை போனவர்களை நாம் களை எடுக்க வேண்டும்.
வாக்குபதிவின் போது நமது தொண்டர்கள் கடைசி வரை இருந்ததில்லை. எந்த தொகுதியில் கடைசி வரை இருந்தார்களோ அந்த தொகுதியில் வெற்றி கிடைத்துள்ளது. அதற்கு உதாரணம் பொள்ளாச்சி தொகுதி.
வெற்றி பெற வேண்டிய தொகுதிகளில் நமது கழகத்தை சேர்ந்த சிலர் பிற்பகல் 1.30 மணியளவிலே வாக்கு சாவடியில் இருந்து வெளியேறி விட்டனர். எதிரிகள் கள்ள ஓட்டுப் ட உறுதுணையாக இருந்து விட்டனர். இந்த சூழ்ச்சியால் தான் வெற்றி வாய்ப்பை இழந்தோம்.
இனி வரும் காலங்களில் நமது ஒன்றரை டி உறுப்பினர்களும் கழகத்தில் விசுவாசமாக இருந்து கழகத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என சபதம் ஏற்க வேண்டும். நமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார் ஜெயலலிதா.
பலவீனமான பட்ஜெட் - ஜெ.
பட்ஜெட் குறித்து ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்து..
இது மிகவும் பலவீனமான பட்ஜெட். வெறும் வாய் வார்த்தைகளால் ஆனது. அரசின் இலக்கில்லாத தன்மையையே இது காட்டுகிறது.
இந்தியாவை பொருளாதார வல்லரசாக்கத் தேவையான எந்த தகுதியும் இந்த பட்ஜெட்டுக்கு இல்லை. மறு சீரமைப்புப் பாதைக்கு நாட்டை இட்டுச் செல்லும் வகையில் எந்தத் திட்டமும் பட்ஜெட்டில் இல்லை.
தேசிய அடையாள அட்டைத் திட்டத்திற்கு வெறும் ரூ. 120 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது இந்தத் திட்டத்தை கேலிக் கூத்தாக்கியுள்ளது.
மாத வருவாய் பிரிவினருக்கு முழுமையாக வரிச் சலுகை அளிக்க வேண்டும் என்பதே அதிமுகவின் லட்சியம். குறைந்தது ரூ. 5 லட்சம் வரை வரியே இருக்கக் கூடாது என்பதே எங்களது நோக்கம். ஆனால் அப்படி எதுவும் இந்த பட்ஜெட்டில் அறிவிக்ப்படவில்லை என்று கூறியுள்ளார் அவர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications