ஆப்கான்-தாக்குதலில் 3 இங்கி. ராணுவ வீரர்கள் பலி
லண்டன்: கடந்த இரண்டு நாட்களில் நடந்த மூன்று வேறு தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் மூன்று இங்கிலாந்து ராணுவ வீரர்கள் பலியாயினர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் மற்றும் அல்-கொய்தாவின் நடவடிககை முற்றிலுமாக அழிக்க அமெரிக்க ராணுவ முயன்று வருகிறது. இவர்களுக்கு இங்கிலாந்து ராணுவமும் உதவி வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கிரெஸ்க் பகுதியில் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரண்டு இங்கிலாந்து வீரர்கள் இரு வேறு சம்பவங்களில் பலியானார்கள். ஒருவர் குண்டு வெடிப்பிலும், மற்றொருவர் கன்னிவெடி தாக்குதலிலும் சிக்கி உயிரிழந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று தெற்கு ஆப்கானிஸ்தானில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெல்ஸ் படையின் முதல் பட்டாலியனை சேர்ந்த ஒரு வீரர் பலியாகியுள்ளார். இதையடுத்து ஆப்கானிஸ்தானில் கடந்த இரண்டு நாட்களில் பலியான இங்கிலாந்து வீரர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 174 பேர் பலி...
இது குறித்து இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திகுறிப்பில், ஆப்கானிஸ்தானில் ஹேல்மன்ட் மாகாணத்தில் கிரெஸ்க் பகுதிக்கு அருகே நடந்து குண்டு வெடிப்பில் வெல்ஸ் முதலாவது பட்டாலியன் வீரர் ஒருவர் பலியானார். ஆப்கானிஸ்தானில் பலியான இங்கிலாந்து வீரர்களின் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது என்கிறது.
இது இங்கிலாந்து ராணுவத்தின் ஆப்கானிஸ்தான் ஹேல்மன்ட் மாகாண செய்தி தொடர்பாளர் கர்னல் நிக் ரிச்சர்டுசன் கூறுகையில், அந்த வீரர் நாட்டுக்காகவும், ஆப்கானிஸ்தானிலும் இருக்கும் நல்லவர்களுக்காகவும் தனது உயிரை துறந்துள்ளார். அவரது மறைவுக்கு அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்த்த இரங்கலை தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications