சிறார்களை மனித வெடிகுண்டுகளாக்கும் தலிபான்கள்!
இஸ்லாமாபாத்: தலிபான் தீவிரவாதிகள், சிறுவர்களைப் பிடித்து அவர்களை மனித வெடிகுண்டுகளாக செயல்பட பயிற்சி அளித்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் இருக்கும் தலிபான்களின் தலைவரான பைதுல்லா மசூத்தான் இதற்காக சிறார்களைப் பிடித்து தலிபான்களுக்கு சப்ளை செய்து வருகிறாராம்.
பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
பைதுல்லா மசூத், தாக்குதல்களில் அதிக அளவிலான சிறார்களை ஈடுபடுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான வீடியோ ஆதாரம் ஒன்றையும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது.
அதில், மனித வெடிகுண்டுகளாக செயல்பட தேர்வு செய்யப்பட்டுள்ள சிறார்களுக்குப் பயிற்சி அளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
குழந்தைகளைத் தேர்வு செய்து, அவற்றுக்கு பயிற்சி அளித்து ஒவ்வொரு குழந்தையையும் 6000 டாலர் முதல் 12 ஆயிரம் டாலர் வரை விற்கிறார்களாம்.
இப்படிப் பயிற்சிக்குத் தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு அதிகபட்ச வயதே 11 தான் என்பதுதான் இதில் கொடுமையானது.
தாக்குல் நடத்தத் திட்டமிடும் இடங்களுக்கு சிறுவர்களை குண்டுகளுடன் அனுப்பினால் யாரும் சந்தேகப்பட மாட்டார்கள் என்பதால் இந்தக் கொடிய திட்டத்தை அமல்படுத்தி வருகிறார் மசூத்.
மசூதைப் பிடிக்கும் நடவடிக்கைகளை தற்போது பாகிஸ்தான் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. அமெரிக்க படைகளும் மறுபக்கம் ஆப்கானிஸ்தானில் இருந்தபடி மசூதைப் பிடிக்க முயன்று வருகின்றன.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications