194 புதிய வானொலி நிலையங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த 10வது ஐந்தாண்டுத் திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட 194 புதிய வானொலி நிலையங்கள் அமைக்கும் பணி 11வது ஐந்தாண்டு திட்டத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.
மக்களவையில் கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர்,
தனியார் ஃஎப்எம் ரேடியோ ஒலிபரப்பு விரிவாக்கம் பகுதி 3 தொடர்பான இந்திய தொலைபேசி ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் குறித்து அரசின் கருத்துகள் இறுதி செய்யப்பட உள்ளன.
அகில இந்திய வானொலியின் வர்த்தக வருமானம் அதற்கு முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் குறைந்துள்ளது.
194 புதிய வானொலி நிலையங்கள் அமைக்கும் பணி 11வது ஐந்தாண்டு திட்டத்திலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications