மேடாஸ்: கைவிட்ட ஆந்திரா... கைகொடுத்த கர்நாடகம்!
ஹைதராபாத்: ஹைதராபாத் பெருநகர் மெட்ரோ ரயில் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து ராமலிங்க ராஜூவின் மேடாஸ் நிறுவனத்தை முழுமையாகக் கழட்டிவிட்டது ஆந்திரப்பிரதேசம்.
ஆனால் திடீர் திருப்பமாக, கர்நாடகாவில் அமையவிருக்கும் இரு பெரிய சர்வதேச விமான நிலையங்களை அமைக்கும் பொறுப்பை மேடாஸிடம் ஒப்படைத்துள்ளது கர்நாடக அரசு.
பெரும் மோசடியில் சிக்கி சத்யம் சாம்ராஜ்யம் சரிந்தபோதே, அதன் துணை நிறுவனமான மேடாஸ் மீதிருந்த நம்பிக்கையும் தகர்ந்தது.
இதனால் மேடாஸுக்கு வரவிருந்த பெரிய ஒப்பந்தங்கள் பல ரத்தாகின. அதில் முக்கியமானது ரூ.12000 கோடி மதிப்புள்ள ஹைதராபாத் பெருநகர ரயில் திட்டம்.
மேடாஸ் நிறுவனத்தின் நிதி நிலை எதிர்பார்த்த மாதிரி இல்லை என்று காரணம் கூறி இந்த ஒப்பந்ததை ரத்து செய்தது ஆந்திரப் பிரதேசம். இத்தனைக்கும் ரயில் திட்டம் முடிவடைந்த 30 ஆண்டுகளில் ரூ.300000 கோடி வருமானத்தைத் தருவதாக உறுதியளித்திருந்தது மேடாஸ்.
இந்த ஒப்பந்தம் ரத்தானதில் மேடாஸ் பெரிதும் ஏமாற்றமடைந்தது. இன்று காலை கடைசி கட்ட முயற்சியாத ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்தார் மேடாஸ் சேர்மன் ராமலிங்கம். ஆனாலும் நிதி நிலை குறித்த உறுதி எதையும் அவர் தரவில்லை என்று தெரிகிறது.
கைகொடுத்த கர்நாடகம்!
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் அமையவிருக்கும் பெரிய க்ரீன்ஃபீல்டு விமான நிலையங்கள் இரண்டை அமைக்கும் ஒப்பந்ததை மேடாஸுக்கு வழங்கியுள்ளது கர்நாடக அரசு.
"மேடாஸ் இயக்குநர் குழுவின் தலைவர் கே ராமலிங்கம் எங்களிடம் நிதி நிலை குறித்த உறுதியை அளித்துள்ளார். எனவே இந்த ஒப்பந்ததை முழு நம்பிக்கையுடன் அந்த நிறுவனத்துக்கு அளிக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார் கர்நாடக உள்துறை அமைச்சர் விஎஸ் ஆச்சார்யா.
சத்யம் நிறுவன மோசடி விவகாரம் உச்சகட்டத்தில் இருந்தபோது, இந்த ஒப்பந்தத்தை மேடாஸுக்கு வழங்க கர்நாடக அரசும் தயங்கியது. ஆனால் மேடாஸ் ராமலிங்கம் அளித்த உறுதிமொழிக்குப் பிறகு இந்த பெரிய ஒப்பந்தத்தை அளித்துள்ளது கர்நாடகம்.
அடுத்த இரு மாதங்களில் இந்த விமான நிலையங்களுக்கான பூர்வாங்கப் பணிகளை ஆரம்பிக்கிறது மேடாஸ்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications