கள்ளக் காதல்-ஆயுர்வேத டாக்டர் தற்கொலை
ஆழ்வார்குறிச்சி: கள்ளக் காதல் மனைவிக்கு தெரிந்ததை அடுத்து நெல்லை அருகே ஆயுர்வேத டாக்டர் ஒருவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரளா திருமலாவை சேர்ந்தவர் ஆஸ்டின்ராஜ். இவர் ஆழ்வார்குறிச்சி சிவசைலம் மெயின் ரோட்டில் ஆயுர்வேத பஞ்சகர்ம சிகிச்சை மையம் நடத்தி வந்தார். இவர் ஆயுர்வேத முறையில் மசாஞ் உள்பட பல்வேறு சிகிச்சைகளை அளித்து வந்தார்.
திருமணமான இவர் முதல் மனைவி இறந்ததை அடுத்து, தாட்டான்பட்டியை சேர்ந்த செலின் மேரி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் ஆஸ்டின்ராஜூக்கும் உதவியாளராக வேலை பார்த்த ஈரூர் ஓமனகுட்டன் என்பவரின் மனைவி ஷியமளாவுக்கும் இடைய கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆஸ்டின்ராஜ் சேலம், மற்றும் கோவையில் சிகிச்சை மையம் நடத்தி வந்தபோது ஷியமாளவின் கணவருக்கும், ஆஸ்டின்ராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்சனைக்கு பின் ஆஸ்டின்ராஜ் கடந்த ஐந்து மாதங்களாக ஆழ்வார்குறிச்சியில் சிகிக்சை மையம் நடத்தி வந்தார். ஷியமளாவும் ஆஸ்டின்ராஜூடன் வந்துவிட்டார். அவர்களது கள்ளக்காதல் இங்கும் தொடர்ந்தது.
ஆழ்வார்குறிச்சி பண்ணை தெருவில் ஷியமளா தனியே ஒரு வீட்டிலும், அதே தெருவில் மற்றொரு வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஆஸ்டின்ராஜூம் வசித்து வந்தனர்.
இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஷியமளா வீட்டின் முன் பாப்பான்குலத்தை சேர்ந்த முத்தையா குடிபோதையில் தவறி விழுந்து இறந்தார். இதனால் பயந்து போன ஷியமளா தனியே வீட்டில் இருக்க முடியாததால் ஆஸ்டின்ராஜ் வீட்டில் இரண்டு நாளாக தங்கியுள்ளார்.
அப்போது வீட்டில் ஆஸ்டின்ராஜூம், ஷியமளாவும் ஒன்றாக இருப்பதை பார்த்து செலின் மேரி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து போலீசில் புகார் கூற போகிறேன் என்று கூறிவிட்டு செலின்மேரி தனது ஊருக்கு சென்றுவிட்டார்.
தனது கள்ளக்காதல் மனைவிக்கு தெரிந்துவிட்டதால் பயந்து போன ஆஸ்டின் ராஜ் நேற்று தூக்க மாத்திரைகளை மதுவில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து ஆழ்வார்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் நசீர் அகமதுகான் வழக்கு பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அக்பர்கான் விசாரணை நடத்தி வருகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications