நாளை முதல் பால் உற்பத்தியாளர்கள் போராட்டம்
சென்னை: பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தி தரக்கோரி நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.
இந் நிலையில் இது குறி்த்து இன்று சட்டசபையில் கேள்வி எழுப்பப்பட்டது. அதன் விவரம்:
சுதர்சனம் (காங்கிரஸ்): பால் விலையை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளை முதல் அரசுக்கு பால் கொடுக்க மாட்டோம் என்று போராட்டமும் அறிவித்துள்ளனர். எனவே பால் உற்பத்தியாளர்களுக்கு நல்ல விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?
முதல்வர் கருணாநிதி: சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் பால் விலை உயர்வு பற்றி அவையில் பேச மாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தால் பால் கொள்முதல் விலையை உயர்த்துவது பற்றி பேசலாம். (கொள்முதல் விலையை அரசு உயர்த்தினால் பால் விலையையும் உயர்த்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)
சுதர்சனம்: கடந்த முறை இது போன்ற பிரச்சினை வந்த போது அரசு பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேசி 50 காசு உயர்த்தி மானியமும் வழங்கியது. அது போன்று இந்த முறையும் பால் உற்பத்தியாளர்களை அழைத்து பேசி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.
கருணாநிதி: அதுபற்றி பேசி நல்ல முடிவு எடுக்கப்படும்.
எஸ்.வி.சேகர் (அதிருப்தி அதிமுக): சென்னை நகரில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதை சமாளிக்க கூடுதலாக பால் சப்ளை செய்யப்படுமா?
அமைச்சர் மதிவாணன்: ஆவின் நிறுவனம் சார்பில் 22 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 10.9 லட்சம் லிட்டர் சென்னை நகரில் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது தனியார் நிறுவனங்கள் பால் விற்பனையில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றன. ஆவின் பால் விலை குறைவாக இருப்பதால் அதன் தேவை அதிகரித்து உள்ளது.
இதை சமாளிக்க ஒன்றிய அளவில் பால் கொள்முதல் செய்யப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும். இதன் மூலம் தட்டுப்பாடு இல்லாத அளவுக்கு ஆவின் பால் சென்னையில் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications