சட்டசபையிலிருந்து பாமகவினர் வெளியேற்றம்
சென்னை: தமிழக சட்டசபையில் இருந்து இன்று பாமக உறுப்பினர்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.
சட்டசபையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.
அப்போது பாமக எம்எல்ஏ ஜி.கே.மணி, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு பேர் உள்ளனர் என்ற பட்டியலை வாசித்தார்.
காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சனம்: பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் துறை மீதான விவாதத்தில் அதைப் பற்றி பேசாமல் ஒவ்வொருவரும் ஜாதியை பற்றி பேசினால் அது நன்றாக இருக்காது.
முதல்வர் கருணாநிதி (குறுக்கிட்டு): திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு கிடைத்துள்ள நன்மைகள் குறித்து 1 நாள் விவாதம் நடத்தலாம். இதற்கு பாமகவினர் தயாராக இருந்தால் ஒரு தேதியை சொல்லட்டும். டாக்டர் ராமதாஸ் அனுப்பிய நன்றி கடிதம் குவியல் குவியலாக என்னிடம் உள்ளது. அவற்றை வைத்து விவாதிக்கலாம்.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்: தகுதி உள்ளவர்கள் இருந்தால் அந்தந்த துறைக்கு நியமித்து இருப்பார்கள்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): ஒவ்வொரு ஜாதியைப் பற்றி பேசினால் அது ஜனநாயகமாக இருக்காது.
அப்போது பாமக எம்எல்ஏக்கள் அனைவரும் எழுந்து நின்று ஜி.கே. மணியை பேச அனுமதிக்க வேண்டும் என்று கோஷமிட்டனர்.
இதையடுத்து அமைச்சர் ஆற்காடு வீராசாமி எழுந்து, பாமகவினர் அவையை நடத்த விடக்கூடாது என்று திட்டமிட்டு வந்து இருக்கிறார்கள். எனவே அவர்களை சபாநாயகர் கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
அமருமாறு சபாநாயகர் எச்சரித்ததும் பாமக உறுப்பினர்கள் தொடர்ந்து எழுந்து நின்று குரல் எழுப்பியபடி இருந்ததால் அவர்களை வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications