புகார் வாங்க மறுத்த பெண் எஸ்.ஐ-4 போலீசார் சஸ்பெண்ட்
மதுரை: மதுரையில் புகார் வாங்க மறுத்த பெண் எஸ்.ஐ. உள்ளி்ட்ட நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
சென்னை போரூரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவர் தூத்துக்குடியில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து இரு தினங்களுக்கு முன் ஒரு வாடகை காரில் தனது குடும்பத்துடன் சென்னைக்கு புறப்பட்டார்.
அவர்கள் மதுரை ரிங் ரோடு கருவேலம்பட்டி விலக்கு அருகே வந்தபோது, போலீஸ் உடையணிந்த மூன்று பேரும், சாதாரண உடையில் ஒருவரும் காரை நிறுத்தினர்.
பின்னர் அவர்கள் திடீரென கார் டிரைவரை தாக்கினர். கத்தியைக் காட்டி பெண்கள் அணிந்திருந்த 31 சவரன் தங்க நகை உட்பட ரூ. 9 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையடித்தனர். காரையும் பறித்துக் கொண்டு, தலைமறைவாகி விட்டனர்.
கொள்ளையர்களிடம் தப்பிய தமிழ்ச்செல்வன் குடும்பத்தினர் திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றனர். அவர்கள் செல்லும் வழியில் திருமங்கலம் நெடுஞ்சாலை ரோந்து எஸ்ஐ பிரியா, ஏட்டு அய்யாபொண்ணு, போலீசார் தங்கபாண்டி, ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனர்.
ஆனால், அவர்கள் சம்பவ இடம் எங்கள் பகுதிக்குள் வராது என கூறி திருநகர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர். இந்த கால தாமதம் காரணமாக தான் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகின்றது.
இதையடுத்து புகாரை வாங்க மறுத்த பெண் எஸ்.ஐ பிரியா உட்பட நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications