ஒபாமாவின் இமேஜை சரிக்கும் வேலையின்மை பிரச்சினை
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு 1 லட்சத்து 50 ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளை அமெரிக்கர்களுக்கு உருவாக்கிக் கொடுத்துள்ளார் பாரக் ஒபாமா. ஆனால், அதே கால கட்டத்தில் வேலை இழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை 20 லட்சம் என்பது அவரை இமேஜை கடுமையாக பாதித்துள்ளது உள்நாட்டில்.
வேறு எந்த அமெரிக்க அதிபருக்கும் கிடைக்காத ஆதரவுடன் பதவிக்கு வந்தார் ஒபாமா.
வந்த வேகத்தில் நெருக்கடிக்குள்ளாகியிருந்த பல நிறுவனங்களைக் காக்க 787 பில்லியன் டாலர்களை வழங்கினார்.
ஆனால் இந்த நிதிச் சலுகைகல் அவர் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. வேலையின்மை அளவு 10 சதவிகிதத்தைத் தாண்டிவிட்டது. வேறு எந்த அமெரிக்க அதிபரின் ஆட்சிக் காலத்திலும் இந்த அளவு மோசமான வேலையின்மை நிலவியதில்லை.
இப்போதைக்கு மக்களுக்கு மகிழ்ச்சி தரும் பொருளாதாரக் கணிப்புகளை, இனிப்பான வாக்குறுதிகளை தூக்கி எறிந்துவிட்டு, நிஜமான நிலையை எடுத்துச் சொல்லி வளர்ச்சியைத் தூண்டுவதே அவசியம் என மக்கள் கருத்து தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் பொருளாதார அறிஞர்கள் பலரும், இந்த ஆண்டுடன் பொருளாதார வீழ்ச்சி நின்றுவிடும், 2010-ல் மீட்சிக் காலம் வந்துவிடும் என நம்பினர். ஆனால் அந்தக் கணிப்பும் தவறாகிப்போயுள்ளது. இப்போதைய நிலவரப்படி 2010 ஆண்டும் அமெரிக்கப் பொருளாதாரம் வீழ்ச்சிப் பாதையில்தான் பயணிக்க வேண்டியுள்ளதாம்.
ஒபாமாவைப் பற்றி மக்களுக்கு நன்கு தெரியும். அவரது நேர்மையை மக்கள் புரிந்து வைத்துள்ளனர். அதனால்தான் இந்த மோசமான சூழலிலும் அவரை இன்னமும் தொடர்ந்து நம்புகிறார்கள். நிச்சயம் இந்த நிலைமையை அவர் சரியாகவே கையாளுவார், என்கிறார் செனட் உறுப்பினரான சம்மர்ஸ்.
ஒபாமா இப்போது அறிவித்துள்ள நிதிச் சலுகைகள் சரியாக பலன் அளித்திருந்தால் இந்நேரம் 6 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றிருப்பார்கள். ஆனால் 1.5 லட்சம் பேர்தான் புதிய வேலைகளைப் பெற்றுள்ளர். மாறாக 20 லட்சம் பேருக்கு வேலை போய்விட்டது.
இந் நிலையில் அடுத்த கட்ட நிதிச் சலுகைகளை அளிப்பது குறித்து யோசித்து வருகிறது ஒபாமா நிர்வாகம்.












Click it and Unblock the Notifications