நீச்சல் போட்டி - யு.எஸ். வீரர் பியர்சோல் புதிய உலக சாதனை

உலகின் நம்பர்-1 நீச்சல் வீரர் அமெரிக்காவின் மைக்கேல் பெல்ப்ஸ். கடந்த பீஜிங் ஒலிம்பிக்ஸ் தொடரில் 8 தங்கம் வென்று அசத்திய இவருக்கு அடுத்து வரும் போட்டிகளில் கடும் சவால் தர காத்திருக்கிறார் மற்றொரு அமெரிக்க வீரர் பியர்சோல்.
நேற்று நடந்த அமெரிக்க சாம்பியன்ஷிப் தொடரின் 100 மீ., பிரேக் ஸ்ட்ரோக் போட்டியில் பங்கேற்ற பியர்சோல் அசத்தினார். 1 நிமிடம் 44.23 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து மைக்கேல் பெல்ப்சின் உலக சாதனை முறியடித்து புதிய வரலாறு படைத்தார்.
இரண்டவாது இடத்தை வேவிட் வால்டர்சும், மூன்றாவது இடத்தை ரியான் லோசட்டும் பிடித்தனர்.
இது குறித்து அவர் கூறுகையில்,
எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சாதனை படைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்கினேன். அதை செய்துகாட்டி விட்டேன். தங்க பதக்கத்தையும், உலக சாதனைகளையும் யார் வேண்டுமானாலும் கைப்பற்றலாம். ஆனால், தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் அது தான் முக்கியம் என்றார்.












Click it and Unblock the Notifications