Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனியுடன் கை குலுக்க மறுத்த ஒபாமா

Subscribe to Oneindia Tamil

Obama and Berlusconi
லா அக்யூலா (இத்தாலி): ஜி 8 மாநாட்டில் கலந்து கொள்ள வந்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, தன்னிடம் கை குலுக்குவதற்காக கையை நீட்டிய இத்தாலி பிரதமர் பெர்லஸ்கோனிக்கு கை குலுக்க மறுத்து விருட்டென சென்றதால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஜி 8 மாநாட்டின் தொடக்கத்திலேயே இவ்வாறு நடந்துள்ளதால் பரபரப்பு உருவாகியுள்ளது.

ஜி 8 மாநாடு இத்தாலியின் லா அக்யூலா நகரில் தொடங்கியுள்ளது. இதில் கலந்து கொள்ள வந்த எட்டு நாடுகளின் தலைவர்களும் குரூப் போட்டோவுக்காக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது அதிபர் ஒபாமாவை வரவேற்ற பெர்லஸ்கோனி, அவரிடம் கை குலுக்குவதற்காக கையை நீட்டினார். ஆனால் தனது கையைக் கொடுக்காத ஒபாமா விருட்டென நகர்ந்து சென்றார்.

இதை எதிர்பார்க்காத பெர்லஸ்கோனி அதை சிரித்தபடி சமாளித்துக் கொண்டு, ஒபாமாவுன் மாடிப் படியில் ஏறிச் சென்றார்.

இந்தக் காட்சி அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால் சில அடி தூரம் சென்ற பிறகுதான், தான் பெர்லஸ்கோனிக்கு கை குலுக்காமல் வந்ததை உணர்ந்தார் ஒபாமா. இதையடுத்து அவரைப் பார்த்து சிரித்தபடி தொடர்ந்து நடந்தார்.

தலைவர்களின் மனைவியரைக் கவனிக்க டாப்லெஸ் மாடல்..

முன்னதாக ஜி 8 மாநாட்டுக்கு வந்துள்ள தலைவர்களின் மனைவியரைக் கவனித்துக் கொள்ளவும், உபசரிக்கவும் தனது அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள முன்னாள் மாடல் அழகியான, டாப்லெஸ்ஸாக போஸ் கொடுத்தவருமான மாரா கர்பாக்னாவை நியமித்துள்ளார் பெர்லஸ்கோனி.

72 வயதான பெர்லஸ்கோனி, பெண்கள் விஷயத்தில் படு கில்லாடி. இந்த வேலைகளால் இவரது மனைவி இவரை விட்டுப் பிரிந்திருக்கிறார். இந்த நேரத்தில்தான் ஜி 8 மாநாடு வந்து விட்டது.

வழக்கப்படி பிரதமரின் மனைவிதான் வருகிற விருந்தினர்களின் மனைவியரை உபசரிப்பது வழக்கம். ஆனால் தனது மனைவி தன்னுடன் இல்லாததால், அவருக்குப் பதில் அந்த வேலையை கவனிக்குமாறு தனது பெண் அமைச்சரான மாராவைக் கேட்டுக் கொண்டுள்ளார் பெர்லஸ்கோனி.

33 வயதேயாகும் மாரா, முன்னாள் மாடல் அழகி ஆவார். பிரா, பேன்டீஸ் விளம்பரங்களில் தோன்றி நடித்தவர். டாப்லெஸ்ஸாகவும் முன்பு போஸ் கொடுத்தவர். மாக்ஸ் இதழ் இவரை உலகிலேயே மிகவும் செக்ஸியான அமைச்சர் என்றும் தேர்ந்தெடுத்து 'கெளரவித்துள்ளது'.

மிஸ் இத்தாலி போட்டியிலும் முன்பு பங்கேற்றழர். இந்த நிலையில் இவருக்கு ஒபாமா, கார்டன் பிரவுன் போன்ற தலைவர்களின் மனைவியரைக் கவனிக்கும் பொறுப்பை அளித்துள்ளார் பெர்லஸ்கோனி. இவருக்கு உதவியாக இன்னொரு பெண் அமைச்சரான மரியா ஸ்டெல்லா ஜெல்மினி இருப்பார். இவரும் இளம் பெண்தான்.

இந்த இருவரும் பெர்லஸ்கோனியின் தீவிர ஆதரவாளர்கள். பெர்லஸ்கோனி மீதான செக்ஸ் புகார்களுக்கெல்லாம் இவர்கள்தான் திட்டமிட்டு மறுப்பு தெரிவிப்பார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரோம் நகரில் ஒரு விபச்சார அழகியுடன் பெர்லஸ்கோனி உல்லாசமாக இருந்தது செய்தியாக வெளி வந்தபோது அதை திட்டவட்டமாக மறுத்து பெர்லஸ்கோனிக்கு முழு ஆதரவுடன் இருந்தவர்கள் இவர்கள் இருவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பரிசாகத்தான் இப்போது புதிய பொறுப்பை அளித்துள்ளார் பெர்லஸ்கோனி என்று நக்கலாக கூறுகின்றன இத்தாலி மீடியாக்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+