For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்போஸிஸ் லாபம் 17.2% அதிகரிப்பு

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: 2009ம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) இன்போஸிஸ் நிறுவனத்தின் லாபம் 17.2 சதவீதம் அதிகரித்து ரூ. 1,527 கோடியைத் தொட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் லாபம் ரூ. 1,302 கோடியாக இருந்தது.

அதே நேரத்தில் கடந்த காலாண்டுடன் (ஜனவரி-மார்ச்) ஒப்பிடுகையில் நிறுவனத்தின் லாபம் 5.33 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த காலாண்டில் லாபம் ரூ. 1,613 கோடியாக இருந்தது.

பங்குச் சந்தையில் இன்று தாக்கல் செய்த தனது காலாண்டு வரவு-செலவு அறிக்கையில் இன்போஸிஸ் இத் தகவலைத் தெரிவித்துள்ளது.

இந்தக் காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 12.73 சதவீதம் அதிகரித்து ரூ. 5,472 கோடியைத் தொட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ. 4,647 கோடியாக இருந்தது.

கடந்த 3 மாதத்தி்ல் இன்போஸிஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 27 புதிய நிறுவனங்களிடமிருந்து ஆர்டர்களைப் பெற்றுள்ளன.

இன்போஸிஸ் நிறுவனத்தி்ன் இந்த அறிவிப்பையடுத்து பங்குச் சந்தையில் அதன் பங்குகள் விலை 3.5 சதவீதம் அவுக்கு உயர்ந்துள்ளது.

நேற்று மாலை ரூ. 1,677 ஆக இருந்த இன்போஸிஸ் பங்கின் விலை இன்று காலை ரூ. 1,735 ஆனது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X