'பிளஸ்டூ முடிவு வெளியான 10 நாளில் கவுன்சிலிங்'
சென்னை: அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான 10 நாட்களில் மருத்துவ, பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.
பொறியியல் படிப்பில் சேர பொதுப் பிரிவுக்கான கவுன்சிலிங் இன்று தொடங்கியது.
200க்கு 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்ற 30 மாணவ-மாணவிகள் முதலில் அழைக்கப்பட்டு அவர்கள் விரும்பிய கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன. அவர்களுக்கு கல்லூரியில் சேருவதற்கான அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர்,
200க்கு 200 மதிப்பெண் பெற்ற 43 பேர் ரேங்க் பட்டியலில் இடம் பெற்றனர். அவர்களில் 10 பேர் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். 30 பேர் என்ஜினீயரிங்கில் சேர்கிறார்கள். இவர்களில் 21 பேர் எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பிரிவையும், 4 பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவையும், 4 பேர் மெக்கனிக்கல் பிரிவையும், ஒருவர் ஆட்டோமொபைல் பிரிவையும் தேர்வு செய்துள்ளனர்.
யாரும் தகவல் தொழில்நுட்பப் பாடப்பிரிவை தேர்வு செய்யவில்லை. இவர்களில் 28 பேர் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளை தேர்வு செய்தனர்.
புதிதாக 85 கல்லூரிகள் அனுமதிக்கு விண்ணப்பித்ததில் இன்று வரை 37 கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்துள்ளது. தற்போதைய நிலையில் 366 சுயநிதி பொறியியல் கல்லூரிகளும், 25 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுமாக மொத்தம் 391 கல்லூரிகள் உள்ளன.
இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 85,000ல் இருந்து 1 லட்சத்து 930 ஆக உயர்ந்துள்ளன.
படிப்படியாக என்ஜினீயரிங் இடங்கள் மேலும் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவு வெளியான 10 நாட்களில் கவுன்சிலிங் தொடங்கப்படும்.
தொழிற்கல்வி பிரிவுக்கான 3,523 இடங்களுக்கு நடந்த கவுன்சிலிங்கில் 2,291 பேர் மட்டுமே சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 1,232 இடங்களுக்கு மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும்.
அதே போல வெளி மாநில மாணவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 52 இடங்களில் சேர ஒருவரும் வரவில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications