கச்சா எண்ணெய் விலை 60 டாலருக்கும் கீழ் சரிந்தது!

கச்சா எண்ணெய் விலை பல மாதங்களாக வீழ்ச்சிப் போக்கிலேயே இருந்தது. ஆனால் திடீரென்று கடந்த மாதத்தில் சில தினங்கள் மட்டும் விலை ஏற்றம் கண்டது. மூன்று தினங்கள் மட்டும் 73 டாலர்களாக விற்பனையானது.
அவ்வளவுதான்... உடனே குய்யோ முறையோ என அலறி அடித்துக் கொண்டு பெரும் அளவு பெட்ரோல் டீஸல் விலைகளை ஏற்றியது இந்திய அரசு.
இதனால் உச்சத்துக்குப் போன பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் இனி எப்போது இறங்கும் என்று யாருக்கும் தெரியாது.
ஆனால் மத்திய பெட்ரோலியத் துறையின் கணிப்புகளுக்கு மாறாக, மீண்டும் மளமளவென்று சரிய ஆரம்பித்துள்ளது கச்சா எண்ணெய் விலை. தொடர்ந்து 13வது நாளாக கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 1.10 டாலர் அளவுக்கு கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
ஆனால் தொடர்ந்து நஷ்டக் கணக்கு காட்டி வரும் இந்திய எண்ணெய் நிறுவனங்களும், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவும் இப்போது வாய் மூடி மௌனம் சாதிக்கின்றனர்.
இன்று மேலும் ஒரு டாலர் குறைந்த கச்சா எண்ணெய் 59.49 டாலருக்கு விற்பனையானது.
கடந்த ஜனவரியில் 11 சதவிகிதம் கச்சா எண்ணெய் விலை சரிந்தது. இந்த வாரம் வீழ்ச்சியின் சதவிகிதம் 10 ஆக உள்ளது. இந்த வீழ்ச்சி வரும் வாரமும் தொடரும் என எதிர்பார்ப்பதாக பிஎன்பி பாரிபாஸ் நிறுவனம் கணித்துள்ளது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications