பெரியாறு அணை: கருணாநிதி, அச்சுதானந்தனை பேச வைக்க மத்திய அரசு முடிவு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள முதல்வர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்யவுள்ளது.
இதுகுறித்த சூசக தகவலை நாடாளுமந்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் இடையே விரிசல் அதிகமாகி வருகிறது. இந்த விவகாரம் சுப்ரீம் கோர்ட் முன்பு இருந்தாலும், மத்திய அரசும், தன் பங்குக்கு, இரு மாநில முதல்வர்களை சந்தித்துப் பேச வைத்து பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கப்படும்.
இரு மாநில அரசுகளின் கவலைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.
பெரியாறு அணைக்குப் பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா பிடிவாதமாகவும், மும்முரமாகவம் இருந்து வருகிறது. சமீபத்தில் கேரள முதல்வர் அச்சுதானந்தன் டெல்லி சென்று பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து இரு மாநில முதல்வர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு கோரியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தப் பின்னணியில் பன்சால் கூறியிருப்பதைப் பார்க்கும்போது விரைவில் இரு மாநில முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெறலாம் என்று தெரிகிறது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications