கள்ளச்சாராயா சாவு - மோடி அரசுக்கும், மல்லையாகவுக்கும் மோதல்

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கள்ளச்சாராயத்திற்கு 120 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தைக் கண்டித்துள்ள கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா, குஜராத் அரசின் மது விலக்குக் கொள்கையை சாடினார்.
இதுகுறித்து மல்லையா கூறுகையில், மது விலக்குக் கொள்கை, குஜராத்தில் தோல்வி அடைந்து விட்டது. அங்கு கள்ளச்சாராயம் பெருகி விட்டது. இதுவே இப்போது அகமதாபாத்தில் 120 பேரின உயிரைக் குடிக்க முக்கிய காரணம்.
மது விலக்கு என்பதை அமல்படுத்த முடியாது என்பதை இப்போதாவது அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
மது விற்பனையைத் தடை செய்தால், கள்ளச்சாராயம், விஷச் சாராயம்தான் பெருகும். இதனால் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான் என்று கூறியிருந்தார் மல்லையா.
இந்த நிலையில் மல்லையா பேச்சுக்கு குஜராத் அரசு இன்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குஜராத் அரசு செய்தித் தொடர்பாளர் ஜெய நாராயணன் வியாஸ் கூறுகையில், விஜய் மல்லையா தனது மது தொழிலை மட்டும் கவனித்தால் போதுமானது. பாதிக்கப்படும் ஏழைகளுக்காக அவர் கவலைப்படத் தேவையில்லை. காரணம், அவருக்கு முதலில் ஏழைகள் மீது எந்த அக்கறையும் கிடையாது.
குஜராத் அரசின் செயல்பாடுகளில் தலையிட அவருக்கு உரிமை கிடையாது. மல்லையா பேசியிருப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.
மது விலக்குக் கொள்கையை அமல்படுத்தாத கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய மாநிலங்களில் கள்ளச்சாராயத்திற்கு குஜராத்தை விட அதிகம் பேர் பலியாகியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
நாட்டிலேயே மது விற்பனை மற்றும் மது குடிப்பதை முழுமையாக தடை செய்துள்ள ஒரே மாநிலம் குஜராத் என்பது குறிப்பிடத்த்கது. ஆனால் கள்ளச்சாராய கும்பல்கள் அங்கு ஏராளமாக உள்ளன. அப்படிப்பட்ட ஒரு கும்பலால்தான் அகமதாபாத்தில், 120 பேர் உயிரை இழந்துள்ளனர்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications