கனரா வங்கியில் ரூ. 13 கோடி மோசடி செய்த இருவர் கைது
கோவை: கோவையில், கனரா வங்கியில் ரூ. 13 கோடி மோசடி செய்த தனியார் கட்டுமான நிறுவன மேலாண் இயக்குனர் மற்றும் கனரா வங்கி முன்னாள் முது நிலை மேலாளர் ஆகியோரை, சி.பி.ஐ கைது செய்தது.
கோவையில் மாருதி ஷெல்டர்ஸ் அண்ட் மாருதி ஹவுசிங் கட்டுமான நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனம் 272 வீடுகள் கட்டுவதாகக் கூறி, கவுண்டம் பாளையத்திலுள்ள கனரா வங்கி கிளையில் கடந்த 2004 -05 ல் ரூ 13 கோடி கடனாக பெற்றது.
ஆனால், கடன் தொகையை அந்த நிறுவனம் திரும்ப செலுத்தவில்லை. இருப்பினும் இந்த நிறுவனத்திற்கு மேலும் கடன் வழங்க வங்கி நிர்வாகம் சார்பில் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது. இது தொடர்பான புகார்கள் சி.பி.ஐ. (ஊழல் தடுப்பு பிரிவு) க்கு சென்ற வண்ணம் இருந்தது.
இதனையடுத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற் கொண்டனர். விசாரணையின் போது போலி ஆவணங்களின் அடிப்படையில், மாருதி ஷெல்டர்ஸ் அண்ட் மாருதி ஹவுசிங் நிறுவனத்துக்கு கடன் வழங்கியுள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து, கனரா வங்கியின் முதுநிலை மேலாளர் சண்முகம், மாருதி ஷெல்டர்ஸ் அண்ட் மாருதி ஹவுசிங் நிறுவன மேலாண் இயக்குனர் குமரன் ஆகியோரை சிபிஐ கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதி மன்றத்தில் ஆஜர் செய்த பின்பு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications