மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை வந்த முதல்வர் கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: முதல்வர் கருணாநிதி மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு இன்று காலை வந்தார்.
முதல்வர் கருணாநிதிக்கு சமீபத்தில் கடும் முதுகு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார். தற்போது வழக்கம் போல தனது பணிகளைப் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக முதல்வர் கருணாநிதி இன்று காலை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு வந்தார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்து பார்க்கப்பட்டன.
இது வழக்கமான மருத்துவப் பரிசோதனைகள்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் வருகையையொட்டி மருத்துவமனைக்கு வெளியிலும், உள்ளும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications