கருணாநிதி கோரிக்கை ஏற்பு - பால் உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக் ஒத்திவைப்பு

கொள்முதல் விலையை பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.20-ம், எருமைப்பால் லிட்டருக்கு ரூ.30 வீதமும் கொள்முதல் விலையாக நிர்ணயிக்க வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் கோரி வருகின்றனர்.
இதை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் 9ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்தனர். இதனால் தமிழகம் முழுவதும் பால் விநியோகம் கடும் பாதிப்பை சந்தித்தது.
இந்த விவகாரம் சட்டசபையி்ல் எதிரொலித்தது. இதுதொடர்பாக நடந்த விவாதத்திற்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி பேசுகையில், 22-ந் தேதிக்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தலாம். அதுவரை பால் உற்பத்தியாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இதை ஏற்று தற்போது போராட்டத்தை ஒத்தி வைத்திருக்கின்றனர் பால் உற்பத்தியாளர்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க மாநில தலைவர் செங்கோட்டுவேல் கூறுகையில்,
பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பேசினார்கள். அவர்களுக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் கருணாநிதி, பால் உற்பத்தியாளர்கள் தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும், 22-ந் தேதி சுமூக உடன்பாடு ஏற்படுத்தி தருவதாகவும் கூறியுள்ளார்.
முதல்-அமைச்சர் கருணாநிதியின் இந்த வேண்டுகோளை ஏற்று போராட்டத்தை ஒத்திவைக்கிறோம். பால் கொள்முதல் விலையை உயர்த்தும் விஷயத்தில் அவர் நல்ல முடிவு எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நல சங்க பொதுச் செயலாளர் எம்.ஜி.ராஜேந்திரன், நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்வர் கருணாநிதியின் அறிவிப்பை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம் என்றார்.
போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து பால் விநியோகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது.
ஆவின் நிறுவனங்களுக்கு வழக்கம் போல பால் வரத்து தொடங்கியிருப்பதாக ஆவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications