இந்தியா வர மன்மோகன் அழைப்பு - ஏற்றார் ஒபாமா

திட்டமிட்டபடி ஒபாமா இந்தியாவுக்கு வருவாரேயானால், அதிபராகப் பொறுப்பேற்ற மிகக் குறுகிய காலத்திற்குள் இந்தியாவுக்கு வரும் முதல் அமெரிக்க அதிபர் என்ற பெயர் ஒபாமாவுக்குக் கிடைக்கும்.
அமெரிக்க அதிபர்களாகப் பொறுப்பேற்பவர்கள் வழக்கமாக தங்களது மிக நெருங்கிய தோழமை நாடுகள், வல்லரசு நாடுகளுக்குத்தான் ஆரம்ப கட்ட பயணங்களை மேற்கொள்வார்கள். பின்னர்தான் மற்ற நாடுகளை எட்டிப் பார்ப்பார்கள்.
இந்த நிலையில், இத்தாலியின் லா அக்யூலா நகரில் நடைபெற்ற ஜி 8 மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், அங்கு பாரக் ஒபாமாவை இருமுறை சந்தித்துப் பேசினார்.
நேற்று 2வது முறையாக சந்தித்துப் பேசியபோது இந்தியாவுக்கு வருமாறு ஒபாமாவுக்கு மன்மோகன் சிங் அழைப்பு விடுத்தார். இதை ஒபாமா உடனடியாக ஏற்றுக் கொண்டார்.
அதேபோல அமெரிக்காவுக்கு வருமாறு ஒபாமாவும் சிங்குக்கு அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து வெளியுறவு செயலாளர் சிவசங்கர் மேனன் கூறுகையில், இந்தியாவுக்கு வருமாறு ஒபாமாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதேபோல அமெரிக்காவுக்கு வருமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இரு அழைப்புகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
விரைவில் தேதிகள் முடிவு செய்யப்படும் என்றார் மேனன்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications