டெல்லி மெட்ரோ பால விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆனது
டெல்லி: டெல்லியில், மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்தது. இதில் இறந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இன்று காலை 5 மணிக்கு இந்த பயங்கர சம்பவம் நடந்தது.
தெற்கு டெல்லியில் உள்ள லேடி ஸ்ரீராம் கல்லூரி அருகே மெட்ரோ ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. அப்போது திடீரென அந்தப் பாலத்தின் தூண்கள் சரிந்து விழுந்ததில் பாலம் இடிந்து விழுந்தது.
இதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் ராட்சத சிமென்ட் சிலாபுக்குக் கீழ் சிக்கி நசுங்கினர். மேலும், சிமென்ட் சிலாபுகள் விழுந்த வேகத்தில் அருகில் இருந்த குடிநீர்க் குழாயும் உடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது.
இந்தக் கோர விபத்தில், முதலில் 3 பேர் உயிரிழந்தனர். காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த கோர விபத்து குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மெட்ரோ தலைவர் ராஜினாமா:
இந்த நிலையில் விபத்துக்கு தான் முழுப் பொறுப்பேற்பதாகவும், இதற்குப் பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் டெல்லி மெட்ரோ ரயில் திட்ட தலைவர் ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.
ஸ்ரீதரன் தமிழகத்தைச் சேர்ந்தவர். மெட்ரோ ரயில் போன்ற திட்டங்களில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச அளவில் இவருக்கு நல்ல பெயரும் உள்ளது.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக டெல்லி விபத்து அமைந்து விட்டது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications