இலங்கை கூட்டுப் படைத் தளபதியாக பொன்சேகா நியமனம்
கொழும்பு: இலங்கை ராணுவத் தலைமைத் தளபதியாக இருந்து வந்த சரத் பொன்சேகா, இலங்கை கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இலங்கைப் படைகளுக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்குக் காரணகர்த்தா என்பதால் பொன்சேகாவுக்கு இந்தப் புதிய பதவி உயர்வை வழங்கியுள்ளார் ராஜபக்சே.
இலங்கையின் முப்படைகளின் தலைமைத் தளபதியாக இனி பொன்சேகா செயல்படுவார்.
மேலும் ராணுவம், கடற்படைக்கும் புதிய தலைமைத் தளபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவத் தளபதியாக ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடற்படைத் தளபதியாக திசரா சமரசிங்கே நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி...
புதிதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
அப்பொறுப்பில் இதுவரை கடற்படைத் தலைமைத் தளபதியாக இருந்து வந்த வசந்த் கரன்னகொடா நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் கூட்டுப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை எதிர்பார்த்திருந்தார். ஆனால் பொன்சேகாவை அந்தப் பொறுப்பில் அமர்த்திய ராஜபக்சே, கரன்னகொடாவை சமரசப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அவரை நியமித்துள்ளார்.
வருகிற 15ம் தேதி முதல் இந்தப் பதவி நியமனங்கள் அமலுக்கு வருகிறதாம்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications