ஆஸ்திரேலிய கிளைக்கு 100 ஊழியர்களை எடுக்கும் இன்போசிஸ்
மெல்போர்ன்: தனது ஆஸ்திரேலிய கிளைக்கு 100 ஊழியர்களைத் தேர்வு செய்கிறது இன்போசிஸ். அத்தனை பேரையும் உள்ளூரிலேயே அது தேர்வு செய்யவுள்ளது.
கடந்த வாரம் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 450 மில்லியன் ஆஸ்திரேலியன் டாலர் மதிப்பிலான புதிய கான்டிராக்ட் கிடைத்தது. இதையடுத்து புதிதாக 100 ஆஸ்திரேலிய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களை அது தேர்வு செய்யவுள்ளது.
சீனியர் பதவி முதல் நடுத்தர ரக பதவி வரை ஆளெடுப்பு நடைபெறவுள்ளது.
மேலும் பட்டப்படிப்பை முடித்து சில ஆண்டுகளே ஆனவர்களையும் கூட எடுக்கவுள்ளனராம்.
சிட்னி, மெல்போர்ன் நகரங்களில் ஆளெடுப்பு நடைபெறவுள்ளது. பணி ஆஸ்திரேலியாவில் என்றாலும் கூட சிலரை நியூசிலாந்துக்கும் அனுப்புவோம் என இன்போசிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டெல்ஸ்ட்ரா நிறுவனத்துடன் இணைந்து தனது ஆஸ்திரேலிய பணிகளை பார்க்கவுள்ளது இன்போசிஸ்.
தற்போது இன்போசிஸ் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் 2500 பணியாளர்கள் உள்ளனர். 1000 வாடிக்கையாளர்கள் உள்ளனர்.
பிரிஸ்பேன், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் இன்போசிஸின் அலுவலகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications